தலைகீழாக நின்று தீர்மானம் போட்டாலும் நீட் தேர்வை அசைக்க முடியாது.. முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2021, 10:45 AM IST
Highlights

நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றும், தலைகீழாக நின்று எத்தனை தீர்மானங்களை கொண்டு வந்தாளும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசால் எதுவும் செய்ய முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்

நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றும், தலைகீழாக நின்று எத்தனை தீர்மானங்களை கொண்டு வந்தாளும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசால் எதுவும் செய்ய முடியாது என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

நீட்  தேர்வை முற்றிலும் ரத்து செய்தும், பள்ளி இறுதி தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்தும், தமிழ்நாடு அரசு நேற்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.நீட் நுழைவு தேர்வு என்பது ஏழை எளிய மக்களின் உயிரை குறிப்பதாக உள்ளது. இந்நிலையில் அதை நீக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அப்போது அறிவித்திருந்தார்.

 

திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பலமுறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது, ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை, இந்நிலையில் நேற்று சட்டமன்ற கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜகவை தவிர திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மதிமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளும் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக மட்டும் நீட் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்புசெய்தது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தலைகீழாக நின்று எத்தனை தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் நீட்தேர்வு, விவசாய சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது திமுக அரசால் எதையும் செய்ய முடியாது என சவால் விடுத்தார். தொடர்ந்து பேசி அவர், தைரியமிருந்தால் நீட் விவகாரத்தில் 2006 -15 ஆம் ஆண்டு வரை நீட் தேர்வுக்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் என கோரிக்கை வைத்தார். 

நீட்டை காங்கிரஸ்-திமுக கொண்டுவந்தாலும் அதை ஏழை எளிய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், சமூகநீதிக்கும் அது எதிரானது கிடையாது என்பது பாஜகவின் கொள்கை என்றார். நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் அதை ரத்து செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

 

click me!