கால்பந்து போட்டியில் கலக்கும் முதல்வர் ஸ்டாலின் பேரன்... போட்டியில் பங்கேற்க விமானத்தில் புறப்பட்டார்.

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2021, 10:12 AM IST
Highlights

அன்றாடம் தொகுதிக்கு விசிட் செய்து மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் துடிப்புமிக்க சட்டமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கால்பந்து வீரராக பரிணமித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து  அணிக்காக விளையாடுவதற்காக முதல்வரின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி இன்று வெளிநாடு புறப்பட்டார். அவரை வழியனுப்ப முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையம் வந்திருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். பல சீனியர் கட்சித் தலைவர்களையே விஞ்சுத் அளவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அன்றாடம் தொகுதிக்கு விசிட் செய்து மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் துடிப்புமிக்க சட்டமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கால்பந்து வீரராக பரிணமித்துள்ளார். இந்தியன் லீக் கால்பந்து தொடர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது, இந்தியாவில் நடைபெறும் முக்கிய போட்டியாக இது கருதப்படுகிறது, இது தொழில்முறை கால்பந்து தொடராக இருந்து வரும் நிலையில், 21 கிளப் அணிகள் அதில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்திற்கான  நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தமிழ்நாடு மாநில முதல்வரின் பேரனும்,  உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி தேர்வாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. 

சென்னை ட்ரையல்ஸ் கால்பந்து அணியில் இருந்து இளம் ஃடிபெண்டர், இன்பன் உதயநிதியை  தேர்வு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் நடக்கவிருக்கும் இந்தியன் ஐ-லிக் கால்பந்து போட்டியில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த நெரோகா கால்பந்து அணியில் சிறப்பாக அவர் விளையாடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த இன்பநிதியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் விமான நிலையம் வந்திருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  
 

click me!