ஸ்டாலின் அதிரடி..! "5 சவரன் வரை விவசாய கடன் தள்ளுபடி"..! வாக்குகளை அள்ள உஷாரான தளபதி..!

Published : Apr 03, 2019, 04:02 PM IST
ஸ்டாலின் அதிரடி..! "5 சவரன் வரை விவசாய கடன் தள்ளுபடி"..!  வாக்குகளை அள்ள உஷாரான தளபதி..!

சுருக்கம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய கடனை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக பெருமாநல்லூரில் பிரச்சார முறையை மேற்கொண்டார் ஸ்டாலின். அப்போது பேசிய போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது ஒன்றும் சிக்கவில்லை என்று அறிவித்திருந்தனர்.

அதற்கு பின் ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் வேறு எங்கோ ஒரு இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பணத்தை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளை பணத்தை வைத்து பறிமுதல் செய்வது போல் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த பண பறிமுதலை காரணம் காட்டி ஆம்பூர் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இடைத்தேர்தல்களை நிறுத்த முயற்சி செய்வதாகவும் 18 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால் அதிமுக பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டே இத்தகைய நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டினார் ஸ்டாலின்.

மேலும் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு துணைபோனால் அதற்கான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய கடனை தள்ளுபடி செய்யப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!