பொதுமக்களிடம் ஆட்டையை போட்டது ரூ.5 கோடி... கோட்டை விட்டது ரூ.2.10 கோடி.. அதிர வைக்கும் திருமா கட்சி நிர்வாகிகள்..!

By Thiraviaraj RM  |  First Published Apr 3, 2019, 3:45 PM IST

பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் காரை அலசி ஆராய்ந்ததில், காரின் கதவுகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் காரை அலசி ஆராய்ந்ததில், காரின் கதவுகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சியிலிருந்து 5 கோடி ரூபாய் பணத்தை காரில் பதுக்கி கொண்டு செல்வதாக திருச்சி ஐஜி அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து நேற்றிரவு பெரம்பலூர் – அரியலூர் இடையே உள்ள பேரளி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன், டாடா சபாரி கார் ஒன்று வந்தது. காரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகி பிரபாகரன் உள்பட 4 பேர் இருந்தனர்.

Tap to resize

Latest Videos

அந்த காரில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பணம் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், பணம் காரில் இருப்பதாக மீண்டும் நம்பத்தகுந்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காரை போலீசார் சல்லடையாக ஜலித்து சோதனையில் ஈடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் காரில் பணம் இருக்கிறது என்று மீண்டும் உறுதியாக தகவல் சொல்லப்பட்டது.

இதை அடுத்து விடுதுலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து சுமார் 2 மணி நேரம் சோதனையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், காரின் பாகங்களில் பணம் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கதவு ஒன்றின் பாகங்களை கழற்றி ஆராய்ந்த போது 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதை அடுத்து அனைத்து கதவுகளின் பாகங்களையும் கழற்றி சோதனையிட்ட போலீசார், 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்தப் பணமானது வருமான வரி உதவி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. காரில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகி பிரபாகரன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகப் பிரிவின் மாநில துணைச் செயலாளர் ராஜா என்பவரது, நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எல்ஃபின் என்ற அந்த நிறுவனத்தை, அக்கட்சியின் அச்சு ஊடகப் பிரிவு துணை செயலர் ரமேஷ் என்பவருடன் இணைந்து ராஜா நடத்தி வருகிறார். அவர்கள் ஐந்து கோடி ரூபாயை ஏமாற்றி விட்டதாக பொதுமக்கள் போலீசார் புகார் அளித்திருந்தனர்.

இதை அடுத்து ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் நேற்று முன் தினம் போலீசில் சரண் அடைந்து, ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி முன் ஜாமின் பெற்றனர். இந்த நிலையில், எல்பின் நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பெரம்பலூரில் காரில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம், இந்நிறுவனத்திற்கு சொந்தமானதுதான் எனக் கூறப்படுகிறது. 

click me!