" திமுக வை மக்கள் தூக்கி எறிவார்கள்... ஸ்டாலினை கதிகலங்க வைத்த விடுதலை சிறுத்தைகள்.

By Ezhilarasan BabuFirst Published Aug 1, 2022, 3:32 PM IST
Highlights

மோடிக்கு முட்டுக் கொடுக்கும் வேலை செய்தால் தமிழ்நாட்டில் இருந்து திமுக தூக்கி எறியப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன் எச்சரித்துள்ளார்.

மோடிக்கு முட்டுக் கொடுக்கும் வேலை செய்தால் தமிழ்நாட்டில் இருந்து திமுக தூக்கி எறியப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மோடியை அழைத்து வருவது, அவரை வைத்து விழா நடத்துவது போன்றவற்றை விடுதலை சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், கூட்டணியில் இருக்கும் ஒரே காரணத்தால்இதை பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததுமுதல் எதிர்கட்சிகளான பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அரசு விமர்சித்து வருகின்றன. குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி, அமைச்சர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அடிக்கடி ஆளுநரை சந்தித்து திமுக அரசு மீது புகார் கூறி வருகிறார்.

மொத்தத்தில் பாஜக திமுக இடையே உறவு மோதலாக மாறியுள்ளது. இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேரு விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு அவரை அவமரியாதை செய்யும் வகையில் ஸ்டாலின் நடந்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்தது.

பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார், ஒரு மாநில முதல்வர் பிரதமரிடம் எப்படி நடந்து கொள்ளக் கூடாதோ அப்படி நடந்து கொண்டார் என ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சனம் எழுந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நிகழ்ச்சிகள் வழக்கத்துக்கு மாறாக பிரதமர் மோடியுடன் தமிழக முதலமைச்சர் இணக்கம் காட்டினார். பிரதமர் மோடி பெருந்தன்மையாளர் என ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். இது பாஜக திமுக தொண்டர்கள் மத்தியில்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் நெருக்கம் காட்டுவதால் எதிர் வரும் தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது .இது கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை கண்டித்து வருகின்றனர். இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்துள்ள  பேட்டியில், தமிழக முதலமைச்சரின் இந்த செயலை கண்டித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் என்ற முறையில் மோடி வருகை தந்தார், அவரை வரவேற்று நாங்கள் விழா நடத்தி இருக்கிறோம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். எனவே திமுகவாக இருந்தாலும் சரி, விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும் சரி, சனாதனத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்து வருகிறது. தற்போது இங்கு நடப்பது சர்வதேச அளவிலான போட்டி, எனவே இந்தப் போட்டியில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவருக்கு மாநில அரசு மரியாதை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே அந்த அடிப்படையில்தான் தளபதி ஸ்டாலின் மரியாதை கொடுத்திருப்பார் என விடுதலைச் சிறுத்தைகள் நம்புகிறது.

ஆனால் இந்த அழைப்பு கூட்டணிக்காக, கொள்கை சார்ந்தது, அல்லது தனிப்பட்ட நலன் சார்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை, ஒருவேளை மோடிக்கு முட்டுக்கொடுக்க, மோடிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என  எண்ணினால் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படும் என்பது ஸ்டாலின் அவர்களுக்கே நன்கு தெரியும். அதனால் தான் அன்று நடந்த நிகழ்வு குறித்து அவர் அறிக்கை கொடுத்திருக்கிறார். இன்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது  என்றால் அதற்கு கூட்டணி பலம் தான் ஒரே காரணம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

அதிமுக வலிமையான கட்சிதான் ஆனால் அது பாஜக உடன் இணைந்த ஒரே காரணத்தினால் அது இரண்டாக உடைந்து நிற்கிறது, நாளைக்கு இதே போல் திமுக பாஜகவை, மோடியை தூக்கிப் பிடித்தால் என்ன நடக்கும் என்பது ஸ்டாலின் அறிவார், அவர் கலைஞர் கருணாநிதியின் வாரிசாக மட்டும் அல்ல, திமுகவின் வாரிசாக மட்டுமல்ல, திமுக கோட்பாட்டு வாரிசாக இருப்பார் என்று விடுதலைச் சிறுத்தைகள் நம்புகிறது.  இவ்வாறு சங்கத் தமிழன் தெரிவித்துள்ளார். 
 

click me!