தமிழக மக்களே... ஒரு நல்ல செய்தி.. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது.

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2020, 12:53 PM IST
Highlights

தமிழகத்தில் தற்போது வரை 11 ஆயிரத்து 173 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 1464 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 11 ஆயிரத்து 173 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 1464 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில், அதை கட்டுப் படுத்துவதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக இருந்த நிலையில் தற்போது அதனுடைய பரவும் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 365 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் மொத்தம் 1,464 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பட்டியலில் கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகாரில் இருந்து வந்த தல ஒருவரும், 12 வயதுக்கு உட்பட்ட 53 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 278 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தோற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 396 பேரும் , கோவையில் 158 பேரும், சேலத்தில் 93 பேரும், குறைந்த பட்சமாக அரியலூர் நாகப்பட்டினத்தில் தல மூன்று பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

இதுவரை தமிழகத்தில் 1 கோடியே பதினைந்து லட்சத்து 13 ஆயிரத்து 892 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 7 லட்சத்து 76 ஆயிரத்து  174பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 68 ஆயிரத்து  909 ஆண்களும் 3 லட்சத்து 7 ஆயிரத்து   231 பெண்களும், 34 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 1,797 பேர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடி திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 666 பேரும் கோவையில் 156 பேர் இடம் பெற்றுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 332பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 11 ஆயிரத்து 173 பேர் மட்டுமே உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத நிலையை உருவாக்கியே தீருவோம் என தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!