தமிழக மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு அடித்து ஊற்றப்போகுதாம்.. சென்னையில் நடக்கபோகுது சம்பவம்.

Published : Nov 22, 2021, 01:56 PM IST
தமிழக மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு அடித்து ஊற்றப்போகுதாம்.. சென்னையில் நடக்கபோகுது சம்பவம்.

சுருக்கம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக 22.11. 2021 ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள். மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 

23.11.2021: மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர வட மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 24.11.2021: ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும். 

25.11.2021, 26.11.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தென்பரநாடு (திருச்சி), மூக்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) தலா 4, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), எடப்பாடி (சேலம்), பந்தலூர் (நீலகிரி), ஆவடி (திருவள்ளூர்) கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 3, எம்ஆர்சி நகர் (சென்னை), ஒய்எம்சி நந்தனம் (சென்னை), தேவாலா (நீலகிரி), எம்ஜிஆர் நகர் (சென்னை), தரமணி  (சென்னை), சென்னை (நுங்கம்பாக்கம்) (சென்னை) தலா 2, பெரம்பூர் (சென்னை), பள்ளிக்கரணை (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி (சென்னை), சத்தியபாமா (செங்கல்பட்டு) எருமப்பட்டி (நாமக்கல்), அண்ணா பல்கலைக்கழகம்  (சென்னை), சங்கரிதுர்க் (சேலம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தளி (கிருஷ்ணகிரி), சத்யபாமா பல்கலைக்கழகம்  (காஞ்சிபுரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), ஏற்காடு (சேலம்) தலா 1. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு