திமுக ஆட்சியில் மெரினா புரட்சி 2.0 ? மாணவர்களை தடுக்க சர்வீஸ் சாலைகள் மூடல்..!

By vinoth kumarFirst Published Nov 22, 2021, 1:50 PM IST
Highlights

தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத்துறை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்ததால் தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத்துறை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்ததால் தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திங்கள்கிழமை மெரினாவில் ஒன்று கூடுவோம் என்றும் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் கூறிவருகின்றனர். இதையடுத்து சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால், சமூக வலைத்தளங்களில் இதுபோன்று வதந்திகளை பரப்புவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட இதர சட்டப்பிரிவுகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இருந்தார். 

இந்நிலையில், இன்று மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டதில் ஈடுபடப் போவதாக தகவல்கள் பரவியதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலை மூடப்பட்டது. மேலும், இன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், மெரினாவுக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றுதுடன் திரும்பி செல்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் மற்றும், மாணவ, மாணவிகள் போராட்டம் மிகப்பெரிய எழுச்சி ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!