திமுக இந்துக்களுக்கு எதிரானது இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி- சேகர் பாபு.

Published : Oct 23, 2021, 11:31 AM ISTUpdated : Oct 23, 2021, 11:34 AM IST
திமுக இந்துக்களுக்கு எதிரானது இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி- சேகர் பாபு.

சுருக்கம்

திமுக இந்துக்களுக்கு  எதிரானது இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால்தான் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றிருக்கிறது என்றும், எதிர்வரும் தேர்தலில் இந்த வெற்றி தொடரும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

திமுக இந்துக்களுக்கு  எதிரானது இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால்தான் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றிருக்கிறது என்றும், எதிர்வரும் தேர்தலில் இந்த வெற்றி தொடரும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதேபோல குயின்ஸ்லாந்து விவகாரத்தில் அந்த இடத்தின் உரிமையாளரிடம் சமரசம் செய்ய இது ஒன்றும் கட்டப்பஞ்சாயத்து அரசு இல்லை என்றும் அவர் கூறினார். சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில் குளம் ஆகிய இடங்களில் இந்து சமயத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 

இதையும் படியுங்கள்: நவம்பர் 1 ஆம் தேதி ( LKG,UKG )மழலையர், பிரைமரி பள்ளிகள் திறப்பு இல்லை.. தமிழக அரசு அதிரடி ஆணை.

அப்போது அந்த கோயில் பராமரிப்பு மற்றும் சொத்து விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், 400 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்த கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தியதாக கூறினார். திருக் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க தேவையான இடம், சுத்தமான தண்ணீர் ஆகியவை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார். தற்போதைக்கு கோவில் வளாகத்திற்கு உள்ளாகவே திருத்தேர் உலா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், 80 சதவீதம் அளவிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற நிலை உருவானபின் திருத்தேர் திருவிழாவுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள்:  காயத்ரி ரகுராம் சறுக்கி விழுந்தபோது விலகிய புடவை.. ஆபாசமாக பதிவிட்ட திமுக பிரமுகர்.. காவல் ஆணையரிடம் புகார்.

அதேபோல குயின்ஸ்லேண்ட் விவகாரத்தில் இடத்தின் உரிமையாளரிடம் சமரசம் செய்ய இது ஒன்றும் பஞ்சாயத்து அரசு இல்லை என்ற அவர், நீதிமன்றம் இறுதி தீர்ப்பு எட்டப்படவில்லை என்பதால் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றார். திமுக இந்துக்களுக்கும் ஆன்மீகத்திற்கும் எதிரான இயக்கம் என்பதனை போன்று சிலர் பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் ஸ்டாலின் முதல்வரான பின்பு அந்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. திமுக இந்துக்களுக்கு எதிரானது இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால்தான் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி எதிர்காலத்திலும் தொடரும் என்றார். 
 

PREV
click me!

Recommended Stories

Vijay: தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்..! Zoho நிறுவனர் பரபரப்பு கருத்து..
TVK VIJAY: ஆளுநர் மாளிகையில் அதிரடி.! பதவியேற்புக்கு நாள் குறிச்சாச்சு.! விஜய்யைத் தடுக்க முயன்று பின்வாங்கிய ஆளுநர்!