மக்களே கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்க.. அடுத்த 4 மாசத்துக்கு இதுதான் கதி.. WHO விஞ்ஞானி அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2021, 10:52 AM IST
Highlights

எத்தனையோ வைரஸ்களின் நாம் எதிர்கொண்டு வருகிறோம், அதனால் ஒருபோதும் நமது வாழ்க்கை ஓட்டம் பாதிப்பது இல்லை, அதுபோல கொரோனாவையும் நாம் கையாள பழகிக் கொள்ள வேண்டும், மற்ற வைரஸ்களுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. 

கொரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிக்க முயற்சிகள் தற்போது இல்லை என்றும், அதனுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் கொரோனா வைரஸ் ஒரு பங்காக இருக்கும் என்றும் அடுத்த 4 மாதங்கள் வரை கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில்  நாட்டிலேயே இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு அது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில்  3வது அலை ஏற்படலாம் என ஐ.சி.எம்.ஆர் எச்சரித்து வருகிறது. இந்நிலையில்  உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது, 

இந்தியாவில் ஜூலை மாதத்தில் 65% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உண்டாகியிருக்கிறது, இதுதவிர 60 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவை பொருத்தவரையில் ஓரளவுக்கு நோய் எதிர்ப்புசக்தி உயர்ந்துள்ளது. மூன்றாவது அலை வராமல் தடுக்க வேண்டுமெனில் அடுத்த நான்கு மாதங்களுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை நாம் தீவிரமாக பின்பற்றியாக வேண்டும், காற்றோட்டமான இடத்தில் இருப்பது, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, முககவசம் அணிவது போன்றவை மிக அவசியம், தற்போதைக்கு கொரோனா நோய்த் தொற்றை முற்றிலுமாக அழிப்பதற்கான முயற்சிகள் இல்லை, அதனுடன் நாம் வாழ பழகி கற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனையோ வைரஸ்களின் நாம் எதிர்கொண்டு வருகிறோம், அதனால் ஒருபோதும் நமது வாழ்க்கை ஓட்டம் பாதிப்பது இல்லை, அதுபோல கொரோனாவையும் நாம் கையாள பழகிக் கொள்ள வேண்டும், மற்ற வைரஸ்களுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. அதேபோல கொரோனாவை தடுக்கவும் மருந்துகள் இருக்கின்றன அதை வைத்து நாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும், கொரோனா வைரஸ் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் இல்லை. குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, ஆனால் நோய்த்தாக்கம் அவர்களுக்கு குறைவாகத்தான் இருக்கும். இதுவரை சிறுவர்கள் 1 சதவீதம் பேர் மட்டுமே இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர், சிறுவர்களை பொறுத்தவரையில் இது அரிதிலும் அரிதான ஒன்றுதான் என அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!