அமெரிக்காவில் இருந்து வந்து கொஞ்சம்கூட ரெஸ்ட் இல்ல.. பாராளுமன்ற கட்டுமான பணியிடத்தில் 1 மணி நேரம் ஆய்வு.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2021, 10:22 AM IST
Highlights

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட அதனால் பாதிக்கப்படாத அளவுக்கு வலிமைபொருந்திய கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. இது வீண் செலவு என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய பாராளுமன்ற புதிய கட்டிடம் அமைப்பதில் மோடி அரசு உறுதியாக இருந்து வருகிறது. 

சுமார் 971 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் தற்போதுள்ள பாராளுமன்றத்திற்கு அருகிலேயே புதிதாக கட்டப்பட்டு வரும் பராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி  இரவு பார்வையிட்டார். மிகப்பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பாராளுமன்றம் மிகவும் கம்பீரமானது, தற்போது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் இன்னும் சில ஆண்டுகளில் நூற்றாண்டு விழா காண உள்ளது. 93 ஆண்டுகள் பழமையானது, நமது வரலாற்றுச் சின்னங்களின் இந்திய பாராளுமன்றமும் இடம்பெற்றுள்ளது. தற்போது அதிகரித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை, அதாவது லோக்சபாவில் 543 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டட திட்டமிடப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை விரிவாக்கம் செய்து கொள்ளும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு வருகிறது, ஒரே நேரத்தில் 1224 உறுப்பினர்கள்  பங்கேற்கும் வகையில் அரங்கம் அமைய உள்ளது, கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது, அதனடிப்படையில் சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 971 கோடி மதிப்பீட்டில் சுமார் 21 மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பாராளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட உள்ளது, மூன்று தளங்கள் கொண்டதாக பாராளுமன்ற கட்டிடம் அமைய உள்ளது, அதாவது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அரங்குகளுடன் பாராளுமன்றம் அமைய உள்ளது. அரசியல் சாசனம் என்ற பெயரில் பெரிய அரங்கு, நூலகம், உணவகம், நிலைக்குழு அலுவலகங்கள் போன்றவை அமைய உள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட அதனால் பாதிக்கப்படாத அளவுக்கு வலிமைபொருந்திய கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. இது வீண் செலவு என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய பாராளுமன்ற புதிய கட்டிடம் அமைப்பதில் மோடி அரசு உறுதியாக இருந்து வருகிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இரவு பகலாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றுக காலை அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி நேற்று இரவு 8:45 மணி அளவில் திடீரென பாராளுமன்ற கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். சுமார் 1 மணிநேரம் வரை கட்டுமான பணிகளை பார்வையிட்ட அவர், அங்குள்ள பொறியாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்களிடம் கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார், பிரதமர் மோடியின் வருகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
 

click me!