மக்களே அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் எச்சரிக்கையா இருப்பது நல்லது.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2021, 2:23 PM IST
Highlights

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 14.10.2021: திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 14.10.2021: திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 15.10.2021:  நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும். 

16.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும்., ஈரோடு கிருஷ்ணகிரி சேலம் தர்மபுரி கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் திருவண்ணாமலை கடலூர் அரியலூர் பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும். 17.10.2021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். 18.10.2021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்யகூடும். 

இதையும் படியுங்கள்: அதிமுக போட்டது தப்புக்கணக்கு. எதிர் கட்சி என்ற குறைந்த பட்ச மரியாதை கூட மக்கள் தரல.. பங்கம் செய்த ஸ்டாலின்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். குறிப்பு :  மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகள் 15.10.2021, 16.10.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.15.10.2021: அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகள், ஆந்திர கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.16.10.2021: மத்திய வங்கக் கடல், வடக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.17.10.2021, 18.10.2021: மத்திய வங்கக் கடல், வடக்கு வங்க கடல் பகுதிகள், மேற்கு வங்காளம், பங்களாதேஷ், ஒடிசா கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடல் பகுதிகள் 

இதையும் படியுங்கள்: ஜி.கே வாசன் வீட்டு வாசலில் சடலம்.. போலீசார் பயங்கர அதிர்ச்சி.. கொலையா.. இயற்கை மரணமா.? தீவிர விசாரணை.

14.10.2021: தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 15.10.2021: தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

click me!