இபிஎஸ் வெளியே சென்றால் தான் கட்சி உருப்படும்.. ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும்.. அதிமுக முன்னாள் நிர்வாகி அதிரடி.!

By vinoth kumarFirst Published Oct 14, 2021, 1:45 PM IST
Highlights

எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் மாபெரும் வெற்றிபெற்ற இயக்கம் தேய்ந்து வருகிறது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு  உள்ள அதிருப்தியால்தான் திமுக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. 

உள்ளாட்சி தேர்தலில் படுதோல்விக்கு பொறுப்பேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.  

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக சரித்தர சாதனை வெற்றியை படைத்துள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக எதிர்பார்த்த எண்ணிக்கையில்கூட வெற்றியை பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி;- தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தோல்வி வேதனையளிக்கிறது. 

எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் மாபெரும் வெற்றிபெற்ற இயக்கம் தேய்ந்து வருகிறது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு  உள்ள அதிருப்தியால்தான் திமுக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. 

அதிமுக நன்மை அடைய வேண்டுமெனில் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து வெளியேற வேண்டும். எடப்பாடி பழனிசாமி வெளியே சென்றால் தான்கட்சியை காப்பாற்ற முடியும். ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், கட்சிக்கும் அவர் துரோகம் செய்துள்ளார். புதுச்சேரியில் அதிமுக பூஜ்ஜியமாகிவிட்டது. கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என்றார். மேலும், சசிகலாவை அரவணைத்துப் போக வேண்டும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என  புகழேந்தி  கூறியுள்ளார்.

click me!