
அரசியலுக்கு வந்திருக்கும் அரிதார நாயகர்களான கமலும், ரஜினியும் யாருக்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ மீடியா மற்றும் பத்திரிக்கைகளுக்கு அதிகமாகவே பயப்படுகிறார்கள். ரஜினிக்கு ‘அப்டியே தலை சுத்தியது’ மீடியாக்காரர்களின் ‘கொள்கை’ கேள்வியைப் பார்த்துதானே?
விமர்சனம் எனும் ஆயுதத்தை கையிலெடுத்து இருவரது பல , பலவீனங்களை மீடியாக்கள் பிரித்து மேய்வதால் மக்கள் மத்தியில் இவர்களின் ஜால பிம்பங்கள் எதுவும் ஒர்க் அவுட் ஆவதில்லை. அதேவேளையில் பத்திரிக்கைகளால் மிகப்பெரிய நன்மை ஒன்றையும் இருவரும் அனுபவிக்கிறார்கள்.
அது ‘சர்வே’ தான். அரசியலுக்குள் எண்டர் ஆகியிருக்கும் தங்களுக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது? என்பதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பத்திரிக்கைகள் எடுக்கும் சர்வே ரிசல்ட்களின் வாயிலாகவே தங்களின் நிலையை இருவராலும் புரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல வாரம் இருமுறை பத்திரிக்கை ஒன்று செம்ம சர்வே ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. அதன் ரிசல்டுகள் சுடச்சுட வெளியாகியுள்ளன.
அந்த சர்வேயின் முக்கிய கேள்விகளும், அதற்கு மக்கள் அளித்திருக்கும் பதில்களின் சதவீதங்களும் பின்வருமாறு.....
* காவிரி பிரச்னையில் தீர்வு ஏற்படாததற்கு யார் காரணம்? எனும் கேள்விக்கு...
பா.ஜ.க.வே என்று 55.78 சதவீதம் பேரும், காங்கிரஸ் என்று 12.99 பேரும், அ.தி.மு.க. என்று 12.04 சதவீதம் பேரும், தி.மு.க.வே என்று 10.13 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.
* காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏன்? எனும் கேள்விக்கு...
அரசியலே என்று 67.91 சதவீதம் பேர் கருத்து சொல்லியிருக்க, 22.87 சதவீதம் பேர் அதை அலட்சியம் என்று சொல்லியிருக்கின்றனர்.
எப்படி பார்த்தாலும் இது பி.ஜே.பி.யின் மீது தமிழகத்துக்கு இருக்கும் கடும் கடுப்பை காட்டுகிறது.
இதன் பிறகுதான் மிக முக்கிய மேட்டருக்கு வருகிறது சர்வே. அதாவது ரஜினி பற்றிய கேள்வியை முன்வைக்கிறார்கள்...
கட்சி பெயர் அறிவிக்க ரஜினி தாமதம்! அரசியலுக்கு வர பயமா?... எனும் கேள்விக்கு
இந்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மை சதவீதத்தினர் சொல்லியிருப்பது...ஆம் அரசியலுக்கு வர ரஜினி பயப்படுகிறார் என்பதைத்தான். சுமார் 30 சதவீதம் பேர் இப்படி சொல்ல, இல்லை என்று 24.33 சதவீதம் பேர் சொல்ல, சரியான நேரத்துக்கு காத்திருக்கிறார் என்று 23.38 சதவீதத்தினர் சொல்ல, கட்சியே தொடங்க மாட்டார் என்று 22.37 சதவீதத்தினர் சொல்லியிருக்கின்றனர்.
ஆக ரஜினி அரசியலுக்கு வர பயப்படுகிறார், அவர் கட்சியே தொடங்க மாட்டார்! என்று சொல்லியிருப்பவர்களின் கூட்டு சதவீதம் ஹெவியாக இருக்கிறது.
இவர்கள் நிச்சயமாக ரஜினியின் அரசியலை விரும்பாதவர்களே. ஆக அரசியல் எண்ட்ரி ரஜினிக்கு மிக மிக கடினமாகத்தான் இருக்கும் என்றே தெரிகிறது.
இதே சர்வேயின் முதல் எபிசோடில் கமல்ஹாசனுக்கு பாசிடீவான பதில்கள் வந்திருந்ததை இந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டியது அவசியமே!
ஆக மொத்தத்தில் பி.ஜே.பி.யின் மீது தமிழகம் கடும் எரிச்சலில் இருப்பது தெரிகிறது. எனவே அக்கட்சியின் பாட்சா இங்கே பலிக்காது என்றே இப்போதைய நிலையில் சொல்ல முடியும்.