சசிகலாபுஷ்பா கணவர் ராமசாமி பற்றி வெளிவந்த அடுத்த "சுவாரஸ்ய தகவல்"..! இந்த சங்கதி தெரியுமா உங்களுக்கு ..?

 
Published : Apr 28, 2018, 04:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
சசிகலாபுஷ்பா கணவர் ராமசாமி பற்றி வெளிவந்த அடுத்த "சுவாரஸ்ய தகவல்"..!  இந்த சங்கதி தெரியுமா உங்களுக்கு ..?

சுருக்கம்

a interesting news about sasikalapushpas husband ramasami

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார் தர்மபுரியை சேர்ந்த வி.கீர்த்திவாசன்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்,985 பணிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வெழுதிய மாணவர்களில்,அகில இந்திய அளவில் 29 ஆவது ரேங்க்கும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து உள்ளார் வி.கீர்த்திவாசன்.

திருச்சி NIT இல் B.TECH  படித்து முடித்துவிட்டு, 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் தங்கி முழு வீச்சில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயின்று வந்தள்ளார்.

இந்நிலையில், வி.கீர்த்தி வாசன் சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் தான் படித்து வெற்றி பெற்றார் என்று செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

RIAS

அதே வேளையில் ஷங்கர்  IAS அகாடமியில் தான் படித்தார் என்றும் மறுபுறம் செய்தி பரவ தொடங்கி இருக்கும் சமயத்தில், இன்னொரு புறம் சமீபத்தில் சசிகலா புஷ்பா கரம் பிடித்த டெல்லி ராமசாமி நடத்தி வரும்  RIAS என்ற பயிற்சி மையத்தில் தான் கீர்த்தி வாசன் பயின்றார் என்றும் பெருமையாக கூறி உள்ளார் ராமசாமி

அதாவது,சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யகூடாது என,சென்னை உயர்நீதின்மன்ற மதுரை கிளையில் தடை வாங்கிய, அவரது முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில், விசாரணக்கு நீதிமன்ற வளாகத்திற்கு சென்ற ராமசாமி கீர்த்திவாசன் பற்றி பெருமையாக கூறி உள்ளார்

ஆக மொத்தத்தில் அகில இந்திய அளவில் 29 ஆவது இடத்தை பிடித்தும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்த கீர்த்திவாசனுக்கு பல்வேறு தரப்பினர் தொடர் வாழ்த்து மழையை தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா புஷ்பா கணவர் ராமசாமி..!

இன்னொரு புறம், இதுவரை ராமசாமியை பொறுத்தவரையில் சசிகலா புஷ்பாவை திருமணம் முடித்தவர் என்ற செய்தியை தவிர்த்து வேறு ஒன்றும் மக்களுக்கு பெரிய அளவில் தெரியாது.

ஆனால் கீர்த்திவாசன் மூலம், ராமசாமி RIAS என்ற பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.  

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!