" மக்கள்தான் எஜமானர்கள் மறந்துடாதீங்க".. அரங்கத்தை அதிரவைத்த ஸ்டாலின்.. ஆடிப்போன அதிகாரிகள்.

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2022, 11:39 AM IST
Highlights

இந்த அரசினுடைய திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்வதுடன், அது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை இணைந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும், உங்களுக்கும் எங்களுக்கும் அதாவது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. 

அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கூறியுள்ளார். இதை யாரும் மறந்து விடக் கூடாது என்றும், ஒரு ரூபாய் செலவு செய்தால் கூட அது கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேர வேண்டும் அதுதான் சிறந்த நிர்வாகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாட்டின் இரண்டாவது நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் கூட்டம்:  

திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. அரசியல், ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. அதேநேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசுக்கு எதிரான விமர்சனங்களும் உள்ளன. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு விட்டது என்ற விமர்சனங்களையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பத்தாவது தளத்தில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மூன்று நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: கேப்டன பாக்கவிட மாட்டேங்கிறாங்க.. விஜயகாந்த் போட்டோவை பார்த்து குலுங்கி குலுங்கி அழும் ராதாரவி.

2வது நாள் மாநாடு: 

அதில் கடந்த பத்து மாத ஆட்சி காலத்தில் வெளியான அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது, இதுவரை  தமிழகத்தில் மொத்தம் 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த திட்டங்களின் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும்,  மாவட்டங்களில் அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்காகவும், அதை ஆலோசித்து உரிய அறிவுரைகள் வழங்குவதற்காகவும் இந்த மாநாடு நடந்து வருகிறது. இந்நிலையில் 2 வது நாள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,  ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்களது மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

இதையும் படியுங்கள்: பாமக.. இதோடு நிறுத்திக்க .. என்ன? சூர்யாவை மிரட்டி பார்க்கிறீர்களா.?? பயங்கரமா எச்சரித்த கம்யூனிஸ்ட்.

மக்கள்தான் எஜமானவர்கள்: 

இந்த அரசினுடைய திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்வதுடன், அது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை இணைந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும், உங்களுக்கும் எங்களுக்கும் அதாவது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.  ஒரு ரூபாய் செலவு செய்தால் கூட அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இதுவே சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கும் விளை பொருட்களை எப்படி மார்க்கெட் செய்யலாம், எப்படி அதன் மூலம் அரசுக்கு வருமானம் ஈட்டலாம் என்பது குறித்தும்,  விவசாயிகள், தொழிலாளர்கள் சிறு தொழில், குறுந்தொழில் என அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்களை, கருத்துருக்களை மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!