திராவிட மாடல் எடுபடாது..! இனி டெல்லி மாடல்தான்..! ஸ்டாலினை திக்கு முக்காட வைத்த ஆம் ஆத்மி

By Ajmal KhanFirst Published Mar 11, 2022, 11:34 AM IST
Highlights

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும், மாநில தலைவர் வசீகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

5 மாநில தேர்தலில் பஞ்சாப்பில் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் 2 இடத்தில் ஆட்சியில் உள்ளது. தற்போது வேறு எந்த கட்சியும் இல்லாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது. விரைவில் நடைபெறவுள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தலில்  தீவிரமாக ஆம் ஆத்மி கட்சி பணியாற்றி வருகின்றனர். எனவே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியாக உள்ளது. டெல்லி நகரம் காங்கிரசின் கோட்டையாக இருந்த நிலையில் அதனை கைப்பற்றிய ஆம் ஆத்மி தற்போது பஞ்சாப்பையும் கைப்பற்றியுள்ளது.

2026 தமிழகத்தில் ஆம் ஆத்மி

ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா, எனும் இயக்கத்தை அரசியலாக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் 2012 ஆம் ஆண்டு துவக்கினார். கட்சி துவக்கிய அடுத்த ஆண்டே டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்,  ஆம் ஆத்மியின் துடப்பம் மற்ற மாநிலங்களிலும் தூய்மை செய்ய தொடங்கியுள்ளது.   பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன், பாஜகாவை தேசிய அளவில் வீழ்த்தும் தகுதி ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்தார், 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என கூறினார். இது அதிர்ச்சி இல்லையென்று தெரிவித்தவர் இது தான் உண்மை, இது தான் நடக்கும் என தெரிவித்தார். டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமான பேருந்தில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை தான் திமுக அரசு செயல்படுத்துவதாக தெரிவித்தார். இனி திராவிட மாடல் ஆட்சி எடுபடாது என தெரிவித்தவர், டெல்லி மாடல் ஆட்சி தான் எடுபடும் என கூறினார். 

 

பாஜக-காங்கிரஸ் கூட்டணி..!

இந்தியாவில்  காங்கிரஸ் இல்லாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தவர்,  அந்த இடத்தை தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளதாக கூறினார். தமிழகத்தில் கூட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி குறிப்பிட்டு சொல்லும்படியாக வாக்குகளை பெற்றதாக தெரிவித்தார். பாஜகவின் பி.டீம் ஆக ஆம் ஆத்மியை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தவர், பாஞ்சாப் மற்றும் டெல்லியில் பாஜக- காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் தான் வீழ்த்தியுள்ளதாக கூறினார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வர கூடாது என காங்கிரஸ் மற்றும் பாஜகவும் உள்ளுக்குள் கூட்டணி அமைத்து வருவதாகவும்  குற்றம்சாட்டினார். உத்தரபிரதேசத்தில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ள பாஜகவால், அந்த மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கூறினார்.  குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்  மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சியாக இருப்பதாக தெரிவித்தார். எனவே  அடுத்த ஆண்டு நடைபெற்றவுள்ள குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என கூறினார், பாஜக தேர்தலில் பெற்ற வெற்றி  நேற்றைய வெற்றி தான் கடைசி வெற்றி என கூறிய வசீகரன், இனி பாஜக வெற்றி பெற வாய்ப்பே  இல்லையென தெரிவித்தார்.

click me!