விடியல் ஆட்சி இல்லை! விடியா மூஞ்சி ஆட்சி! கொந்தளிப்பில் மக்கள்.. போறபோக்கில் உதயநிதியை விளாசிய டிடிவி..!

Published : Dec 14, 2022, 07:27 AM ISTUpdated : Dec 14, 2022, 07:30 AM IST
விடியல் ஆட்சி இல்லை! விடியா மூஞ்சி ஆட்சி! கொந்தளிப்பில் மக்கள்.. போறபோக்கில் உதயநிதியை விளாசிய டிடிவி..!

சுருக்கம்

 திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், இதில் ஏதோ அவசரம் தெரிகிறது. அதை காலம் தான் உணர்த்தும். 

தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தனது 60வது பிறந்தநாளை தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், இதில் ஏதோ அவசரம் தெரிகிறது. அதை காலம் தான் உணர்த்தும். 

இதையும் படிங்க;- முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறி! அதற்கு அமைச்சர்கள் சண்டையே உதாரணம்! திமுகவை ரவுண்ட் கட்டும் டிடிவி.!

தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தில் நடப்பதை பக்கத்தில் இருக்கும் புதுச்சேரி பார்த்து கொண்டு தான் இருக்கிறார். ஆகையால், புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. விடியல் ஆட்சி வருவதாக சொல்லிவிட்டு விடியா மூஞ்சி ஆட்சியாக இருப்பதாக மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என டிடிவி.தினகரன் கூறினார். 

மேலும், பேசிய அவர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் தான் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த முடியும். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த திமுகவை, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வருங்கால தேர்தல்களின் மூலம் வீழ்த்த வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அம்மாவின் உண்மையான தொண்டர் இல்லை, என்பதை பலமுறை நிரூபித்து வருகிறார் என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;-  தலையில்லாத முண்டமாக அதிமுக..! இபிஎஸ் உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை- டிடிவி தினகரன் ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!