திராவிட மாடல் போல உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது கூட புது மாடலாக இருக்கலாம் என்று தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
திராவிட மாடல் போல உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது கூட புது மாடலாக இருக்கலாம் என்று தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இருந்து விமான நிலைய விரிவாக்கத்திற்கு 300 ஏக்கர் நிலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது புதுவைக்கு தேவையானது தமிழகத்தில் இருந்து அந்த 300 ஏக்கர் நிலம். திராவிட மாடல் புதுச்சேரிக்கு தேவை கிடையாது. ஆகவே விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அந்த நிலத்தை முதலில் கொடுக்கட்டும். புதுவை மக்கள் மீது உண்மையான அக்கரை உள்ளது என்றால், இது புதுவை மக்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களும் தான் இதில் பயனடைவார்கள் என்பதை நான் தமிழக முதல்வரை சந்திக்கும் போதும், தென்னக முதல்வர் மாநாட்டிலும் இதை நேரடியாக அவரிடம் கேட்டிருக்கிறேன்.
இதையும் படிங்க: அடிமைகளின் ஓலங்களும், சங்கிகளின் ஊளைகளும் கேட்கிறது.. எதிர்க்கட்சிகளுக்கு அதிரடி பதில் கொடுத்த டி.ஆர்.பி ராஜா
undefined
புதுச்சேரிக்கு என்ன வேண்டும் என்பதை அதை முதலில் தரட்டும். இன்னொன்று இங்கே எந்த அடக்குமுறையும் இல்லை. நான் ஒரு துணைநிலை ஆளுநர் மட்டுமே, அடக்குமுறை என்பதெல்லாம் கிடையாது நான் துணையாக மட்டுமே நின்றுக் கொண்டிருக்கின்றேன். ஆளுநரின் தலையீடா என்ற ஒரு குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஆள் ஆளுக்கு தலையீடு இருக்கின்ற தமிழக அரசை விட ஆளுநர் தலையீடு இருந்தால் ஒன்னும் பிரச்சினை இல்லை. ஏனென்றால் அதிகாரப்பூர்வமாக ஆட்சி முறையில் நாங்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை ஒன்று இருக்கிறது. அதனால் இன்றைய சூழ்நிலையில் அண்ணன் ஸ்டாலின் புதுச்சேரிக்கு வந்து பேசியது எதுவுமே சரி கிடையாது என்பதை தெளிவாக சொல்கிறேன். இணையாக ஒற்றுமையாக ஒரு ஆட்சி நடைபெறுகிறது. பொம்மை ஆட்சி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே அடிகரித்த போதை பழக்கம்… வீடியோ ஆதரத்துடன் குற்றம்சாட்டிய அண்ணாமலை!!
பொம்மையாக முதலமைச்சர் இருக்கிறார் என்று தமிழக முதல்வர் சொன்னது உண்மைதான், ஆனால் கர்நாடகாவில் தான், புதுச்சேரியில் இல்லை. அண்ணன் ஸ்டாலின் தவறாக சொல்லிவிட்டார். பொம்மை அவர்களின் ஆட்சி கர்நாடகாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் என்று தெரியாமல் சொல்லிவிட்டார். அவர்கள் எல்லாம் சொல்லும் அளவிற்கு இங்கே ஒன்றும் இல்லை. நல்ல ஆட்சி நடைபெற்ற கொண்டிருக்கிறது. திராவிட மாடல் போல உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது கூட புது மாடலாக இருக்கலாம். நாங்கள் எல்லாம் 25 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை. அதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.