கொரோனா ஒழிப்புக்கு மோடி எடுக்கும் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் பாராட்டு.!!

By Thiraviaraj RMFirst Published Apr 6, 2020, 9:48 AM IST
Highlights

கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளை பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிதலைவர்கள் சோனியாகாந்தி முதல் ப.சிதம்பரம் வரை பாராட்டி வருகின்றனர்.சமீபகாலமாக சிதம்பரம் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டி வருகிறார்.

T.Balamurukan

கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளை பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிதலைவர்கள் சோனியாகாந்தி முதல் ப.சிதம்பரம் வரை பாராட்டி வருகின்றனர்.சமீபகாலமாக சிதம்பரம் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டி வருகிறார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களுடன்,முன்னால் பிரதமர்,குடியரசு தலைவர்கள் ஆகியோரிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். 

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் தனது டுவிட்டரில்.., "இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து. மிகப் பரவலாக, மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும்" என்றார்.
 

click me!