சுகாதாரத்துறை பெண் ஊழியரை மிரட்டிய திமுக பிரமுகர் மீது வழக்கு!!

By Thiraviaraj RMFirst Published Apr 6, 2020, 9:12 AM IST
Highlights

கோயம்புத்தூரில் கணக்கெடுப்பு பணிக்கு சென்ற சுகாதாரத் துறை பெண் ஊழியா்களை மிரட்டிய திமுக பிரமுகர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது.இச்சம்பவம் திமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

T.Balamurukan

கோயம்புத்தூரில் கணக்கெடுப்பு பணிக்கு சென்ற சுகாதாரத் துறை பெண் ஊழியா்களை மிரட்டிய திமுக பிரமுகர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது.இச்சம்பவம் திமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடு சென்று வந்தவா்கள், கொரோனா பாதிப்பு உள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளை தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.கோவை மாநகராட்சி முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுடன், சுகாதாரத் துறை, அங்கன்வாடி ஊழியா்கள் உள்ளிட்டோர் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

 கோவை, கரும்புக்கடை அருகே சுகாதாரத் துறை, அங்கன்வாடி பெண் ஊழியா்கள் மூன்று பேர் கணக்கெடுக்கும் பணிக்கு  சென்றனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா் இஸ்மாயில் என்பவா், பெண் ஊழியா்களை அவதூறாகப் பேசினாராம்.அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியா், போத்தனூா் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இஸ்மாயிலை போலீஸார் கைது செய்தனா். அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், நோயைப் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

click me!