எங்களுக்கே தண்ணீர் இல்ல….நாங்க எப்படி உங்களுக்கு தர முடியும்? கைவிரித்த கர்நாடகா!!

Asianet News Tamil  
Published : Feb 01, 2018, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
எங்களுக்கே தண்ணீர் இல்ல….நாங்க எப்படி உங்களுக்கு தர முடியும்? கைவிரித்த கர்நாடகா!!

சுருக்கம்

Patel minister press meet about cauvery water

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாமல் வாடும் சம்பா பயிரை காப்பாற்ற நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் அதற்கு பதில் அளிம்ம சித்தராமையா, தண்ணீர் திறந்துவிட சாத்தியமில் என பதில் கடிதம் அனுப்பியுருந்தார்.

இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேச நேரம் ஒதுக்கும்படி எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.



இந்நிலையில் பெங்களூருவில்  செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் , தமிழக முதலமைச்சர்  காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கேட்டு உள்ளார். அவரை சந்திப்பது குறித்து, முதலமைச்சர் சித்தராமையா தான் முடிவு எடுப்பார் என கூறினார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. அணைகளில் இருப்புள்ள தண்ணீரை ஜூன் மாதம் வரை பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீருக்கு பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீருக்கே போதுமானதாக உள்ளது. எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்பது சாத்தியமில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெங்களூருவுக்கு வரும்போது அவரிடம் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை பற்றியும், இங்கு நிலவும் சூழ்நிலை பற்றியும் தெளிவாக எடுத்து கூறப்படும் என தெரிவித்த அமைச்சர் எம்.பி.பட்டீல், . அதன்பிறகு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதா?, வேண்டாமா? என்பது தொடர்பாக தங்களது முதலமைச்சர்  சித்தராமையா இறுதி முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!