கட்சிக்கு மீண்டும் வருவேன்! மன்னிப்பு கேட்டால்...! கெத்து காட்டும் அழகிரி!

 
Published : Dec 27, 2017, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
கட்சிக்கு மீண்டும் வருவேன்! மன்னிப்பு கேட்டால்...! கெத்து காட்டும் அழகிரி!

சுருக்கம்

party will come to me and ask forgiveness - M.K. Azhagiri

வைகோ, என்னை சந்தித்ததற்காக, திமுகவில் இருந்து என்னை நீக்கினார்கள்; ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் என்று வைகோ கூறுகிறார். இப்போது ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு போட்டியிட்ட நிலையிலும், திமுக வெற்றி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளரான மு.க.அழகிரி, திமுகவில் மாறுதல் தேவை என்று கூறியுள்ளார். இது குறித்து வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

திமுக வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் மாறுதல் வேண்டும் என்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோற்றது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பெற்றிருக்கிறார். தம்பி வா, தலைமையேற்கவா என்றால் ஜெயிக்க முடியாது. களப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

வெற்றி பெற்ற தினகரனுக்கு ராதாரவி வாழ்த்து சொல்கிறார். இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவர் போன்றவர்களுக்குத்தான் திமுகவில் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். சுயநலத்துடன் கட்சியில் இருப்பவர்களை மாற்ற வேண்டும். உண்மையான விசுவாசிகளுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும். ஆனால், அதெல்லாம் இப்போது நடக்குமா? என்று அழகிரி கேள்வி எழுப்பினார்.

வைகோ என்னை சந்தித்ததற்காக என் மீது நடவடிக்கை எடுத்ததாக சொன்னார்கள். அதே வைகோ, முரசொலி பவள விழாவுக்கு அழைக்கப்பட்டார்; ஸ்டாலின் முதலமைச்சராவால் என்று இப்போது கூறுகிறார். இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று காட்டமாக கூறினார். இதே வைகோ, கருணாநிதியை, எவ்வளவு இழிவாக பேசினார் என்பதை மறந்து விட்டார்கள். ஆளுக்கொரு நியாயம்...! என்றார்.

என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? கட்சியில் உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியதால், என்னைக் கட்சியைவிட்டு நீக்கியதாக அறிவித்தார்கள். ஆனால், தொடர்ந்து கட்சிக்கு துரோகம் செய்து வரும் அவர்களிடம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என்றார். கட்சிக்கு நான் வர வேண்டும் என்றால் அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கட்டும் அப்போது பார்க்கலாம் என்றும் அழகிரி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!