திமுக படுதோல்வி எதனால்? ஸ்டாலினேயே அதிரவைத்த காரணங்கள்...

First Published Dec 27, 2017, 1:54 PM IST
Highlights
reason behind DMK Loss their deposite at RK Nagar By Poll


234 தொகுதியைப்போல ஆர்.கே.நகர் ஒரு சாதாரண தொகுதிதான், மொத்தமே இரண்டு லட்சம் வாக்கு கொண்ட சிறு தொகுதி ஆனால் இந்த தொகுதி ஆளும் அரசையும், பலம் வாய்ந்த எதிர்கட்சியையும் மரண அடி அடித்துள்ளது. அதுவும் திமுக என்ற ஒரு பெரிய கட்சியை டெப்பாசிட் இழக்க செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிமுக என்ற ஒரு பெரிய கட்சியிடமோ, அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியிடமோ தோற்றிருந்தால் கூட பெருய பொருட்டாக எடுத்துகொள்ள தேவையில்லை, யாருக்கும் தெரியாத புதிய சின்னம், அதுவும் பத்தே நாளில் ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் படுதோல்விய சந்தித்தது திமுகவினரையே தினரடிதுள்ளது.

திமுக எப்படி டெபாசிட்டை இழந்தது? தோல்விக்கான காரணம் என்ன? இதோ;  அதிமுக இரண்டாகப்பிரிந்த நிலையிலும்திமுக வெற்றிபெறவில்லையே? மேலோட்டமாகப் பார்த்தால்இந்தக் கேள்வியில்அர்த்தம் இருப்பதாகத் தெரியும். ஆனால்உண்மையான களநிலவரத்தைப்புரிந்து கொண்டால்அர்த்தம், அபத்தமாகிவிடும். ஆர்கேநகரில் நடைபெற்றது தேர்தலே அல்ல. இது தேர்தல் ஆணையத்திலிருந்து, சின்னக் குழந்தைவரை நன்றாகத் தெரியும். அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையேநடைபெற்றுவந்த அதிகார மோதலின் தொடர்ச்சியே இந்தத் தேர்தல்.



இரு தரப்புகளுக்குமே வாழ்வா,சாவா நெருக்கடி.எனவே வரலாறு காணாத வகையில் பணத்தைஅள்ளியிறைத்தார்கள். பச்சையாகசொல்வதானால் 10(ஆயிரம்) பெரிதா, 6(ஆயிரம்) பெரிதா? என்கிறகரன்சி யுத்தத்தம்தான் அங்கே நடைபெற்றது. இதில் திமுகவிற்குக் கிடைத்த வாக்குகள் விலைமதிப்பற்றவை. அதை குறைத்து மதிப்பிடுவது சரியாகஇருக்காது.

போனமுறை வாங்கியவாக்குகளைக் கூட திமுக இந்தமுறைவாங்கவில்லையே? குறிப்பிட்ட ஒரு கட்சி,குறிப்பிட்ட ஒருதொகுதியில் ஒருமுறைவாங்கிய வாக்குகளைஅப்படியே நகலெடுத்தமாதிரி அடுத்தமுறைவாங்கியதில்லை,வாங்கவும் முடியாது. தேர்தலில் முன்வைக்கப்படும் முக்கிய பிரச்சனை தொடங்கி இதற்கு பல காரணிகள் உண்டு. போன முறை ஆர்கே நகரில் நடந்தது பொதுத்தேர்தல். அப்போது " திமுக ஆட்சியில்அமர வேண்டும் " என்றஅடிப்படையில் உதயசூரியனுக்கு 56,000 வாக்குகள் விழுந்தன. ஆனால் இப்போது நடந்திருப்பதோ இடைத்தேர்தல் என்கிற பெயரில் அரங்கேறிய வாக்கு விற்பனை.



இந்தவர்த்தக சூதாட்டத்தில் திமுக கடுகளவு கூட பங்கேற்கவில்லை. தலைமை அதை அனுமதிக்கவும் இல்லை. இத்தகைய சூழலில் போன முறை வாங்கிய வாக்குகள் எங்கே போயிற்று என கேட்பது அர்த்தமற்றது. இவ்வளவு ஏன்?2015 இடைத்தேர்தலில்ஜெயலலிதாவாங்கியது 1,60,432 வாக்குகள். அதற்குப் பின்னர் அவரும் சரி, அவரது வாரிசுகளாகச் சொல்பவர்களும் சரி, இந்தளவு வாக்குகளை வாங்கியதில்லை. அப்படியானால் ஆர்கேநகரில் அதிமுகசெல்வாக்குக்குறைந்துவிட்டது என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

திமுக டெபாசிட்டைபறிகொடுத்துவிட்டது என சிலர் புளகாங்கிதம்அடைகிறார்களே? வரலாறு காணாதஜனநாயக மோசடியைஅரங்கேற்றியிருக்கும்ஜெயலலிதாவின்வழித்தோன்றல்களானஇபிஎஸ், ஓபிஎஸ் மற்றும்தினகரன் தரப்புகளை காறி உமிழ வேண்டியவர்கள் அதைச்செய்யாமல், கறைபடியாத திமுகமீது சந்தடி சாக்கில் புழுதி வாரிதூற்றுகிறார்கள். இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைவதும், டெபாசிட்டைப் பறிகொடுப்பதும் வழக்கமான ஒன்றுதான். இது, ஏதோ இப்போதுதான் முதல் முறையா நடக்கிறதாகவோ, இல்லை திமுகவுக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதாகவோ நினைத்தால் அது அவர்களின் அறியாமை. 2016 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அதிமுக அப்போது குமரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது. அதுபோலவே பெண்ணாகரம் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக3வது இடத்திற்குத்தள்ளப்பட்டுடெபாசிட்டையும் பறிகொடுத்தது.



களப்பணியில் திமுக பின்தங்கிவிட்டது என கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி? களப்பணி எதிலும் திமுக பின் தங்கிவிடவில்லை. "பணம் கொடுப்பதில்தான் பின்தங்கியது". ஓட்டுக்கு பணம்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால் தோல்வியே என்றாலும் அதைப் பற்றி அவர் கவலைபடப் போவதில்லை. திமுகவிற்கு எந்தவித இழப்பும் கிடையாது. விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மக்களுக்கான ஒரு நல்ல அரசியலை ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்ல முனைகிறார். இந்தநிலையில் அவரது கரங்களுக்கு வலு சேர்க்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பதாலேயே மக்கள் தினகரனுக்கு அபரிமிதமான ஆதரவு தந்திருப்பதாக சிலர் கூறுகிறார்களே? அவர் எந்தக் காலத்திலும் பாஜகவை நேரடியாக எதிர்த்ததில்லை. மதவாத சக்திகளுடன் மல்லுகட்டுவதற்கு அவர் ஒன்றும் திராவிடக் கொள்கைகளின் வார்ப்படம் அல்ல. கொள்ளையடித்து சேர்த்துவைத்திருக்கும் பணத்தைக் குறிவைத்து மத்திய அமைப்புகள் அவர்மீது அம்புகளை பாய்ச்சுகின்றன. அதனால் தினகரன், பாஜகவுக்கு பரம எதிரி என்கிற தோற்றப்பிழை ஏற்பட்டிருக்கிறது. நாளையே ஏதாவது அட்ஜஸ்மெண்ட் ஆகிவிட்டால். பாஜகவிடம் சரண்டர் ஆக கொஞ்சமும் தயங்கமாட்டார். ஜனாதிபதி தேர்தலின்போது, வாண்டடாக பாஜக வண்டியில் ஏறி அதற்கு ஆதரவு கொடுத்தவர் தினகரன் என்பதை மறந்துவிடக் கூடாது.



மோடி, கலைஞரை சந்தித்ததால், இஸ்லாமிய வாக்குகள் விலகிச் சென்றதாகக் கூறப்படுவது பற்றி? மிகவும் கீழ்த்தரமான கண்ணோட்டம். மோடியுடன் கொள்கை ரீதியாக திமுகவிற்கு ஆயிரம் கருத்துவேறுபாடுகள் உண்டு. எனினும், நாட்டின் உயர்ந்த பதவியிலிருக்கும் ஒருவர், உடல் நலிவுற்றிருக்கும் கருணாநிதியை காண விரும்பும் பட்சத்தில், குறுக்கே விழுந்து தடுக்கவா முடியும்? அப்படித் தடுப்பதும் எந்த வகையில் சரியாகும்? மோடி சந்திப்பிற்கு பிறகு திமுக நிலைப்பாட்டில் அப்படியென்ன தலைகீழ் மாற்றம் வந்துவிட்டது? மத்திய பாஜக அரசின் மக்கள்விரோத செயல்களை ஸ்டாலின் அளவிற்கு நாள்தோறும் கடுமையாக விமர்சிப்பவர்கள் இங்கு வேறு யாரேனும் உண்டா?

ஆர்கே நகர் முடிவுகள் தமிழக அரசியலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? உண்மையில் இந்த முடிவு திமுகவை விட, அதிமுகவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.விஸ்வரூபமெடுக்கும் அதிகார மோதல், கட்சியையும், ஆட்சியையும் நிச்சயம் காவு வாங்கும். அதன்பின்னர் குழம்பியக் குட்டையாகக் காட்சியளிக்கும் தமிழக அரசியல் களத்தில் தெளிவு பிறக்கும் இப்படி ஒரு  பதிவு வாட்ஸ் ஆப்பிள் வலம் வருகிறது.

click me!