திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் வரலாம்.. ஆளுங்கட்சியை அலறவிடும் ஜெயக்குமார்..!

Published : Nov 21, 2022, 02:48 PM IST
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் வரலாம்.. ஆளுங்கட்சியை அலறவிடும் ஜெயக்குமார்..!

சுருக்கம்

அதிமுகவில் 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை 99 சதவீதம் பேர் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் போது ஒரு சதவீதம் ஆதரவு கூட இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். 

தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுகவில் 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை 99 சதவீதம் பேர் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் போது ஒரு சதவீதம் ஆதரவு கூட இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். ஓ.பன்னீர்செல்வம் கூட்டுவது பொதுக்குழு அல்ல. அது ஒரு பொய்க்குழு.  ஓ.பி.எஸ். நடத்துவது ஒரு கட்சி அல்ல, அது ஒரு நிறுவனம்தான்.

இதையும் படிங்க;- ஏழு பேர் விடுதலைக்காக துரும்பை கூட கிள்ளிப் போடாதா திமுக.. ஸ்டாலினை போட்டு தாக்கும் ஜெயகுமார்..!

ஓபிஎஸ் ஆரம்பத்தில் இருந்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் உடன் தொடர்பில் இருந்துள்ளார். ஓபிஎஸ் அந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார். எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அதே குடும்பத்தை ஓபிஎஸ் சென்று பார்க்கிறார். இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து பொறுப்பு கொடுத்து இதை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார். கட்சிக்கு தியாகம் செய்தவர்கள்தான் பொறுப்பில் இருக்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ் எந்த வரலாறும் இல்லாதவர்களே பொறுப்பில் உள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள், ஏன் இப்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட எங்களுடன் வரலாம். இப்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ளவர்கள் திமுகவுடன் ஒன்றியுள்ளனரா என்றால் கிடையாது. அவர்களும் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது மகனுக்கும் இடையே லவ் டுடே டிஸ்கஸ்தான் நடந்து கொண்டு உள்ளது. மழை பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் பார்வையிடாமல், போட்டோ சூட் நடத்தி வந்து உள்ளார். திமுக அரசு அரசு கேபிள் நிறுவனத்தை முடக்கிவிட்டு, அவர்களது சொந்தமான நிறுவனங்களுக்கு தர முன்வருகிறது என ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க;-  மரத்தில் துணியை சுற்றி வைத்தால் கூட அண்ணார்ந்து பார்ப்பவர் ஜெயக்குமார்.. பங்கமாய் கலாய்த்த கோவை செல்வராஜ்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு