மக்களவை தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு என எஸ்.எம். பாக்கர் அறிவித்துள்ளார். சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.
வரும் மக்களவை தேர்தலில் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகிறது திமுக. அதேபோல் அதிமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். ஆனால் சிறுபான்மை வாக்குகளை டி.டி.வி.தினகரன் மக்களவை தேர்தலில் கொத்தாக அள்ளப்போகிறார். ஏனென்றால் எஸ்டிபிஐ கட்சியை தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் டிடிவி தினகரனை நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதனிடையே டி.டி.வி. தினகரனின் அமமுக இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அந்த கட்சியுடன் எஸ்டிபிஐ கட்சி மட்டும் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு என எஸ்.எம்.பாக்கர் அறிவித்துள்ளார். சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து நம்மை விட்டு சிறுபான்மையினரின் வாக்குகள் எங்கும் போய்விடாது என கணக்குப்போட்டு வந்த திமுக அதிமுக ஆகிய கட்சிகள் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியாக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் கலக்கத்தில் உள்ளனர்.