’அதிமுகவை விட நாங்கதான் அதிகம்...’ திமுகவுக்கு சவால் விடும் டி.டி.வி..!

By Thiraviaraj RMFirst Published Mar 17, 2019, 1:16 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் அதிமுக- திமுகவை எதிர்த்து நேரடியாக 8 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.  முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள அமமுக திமுக போட்டியிடும் 9 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. 

மக்களவை தேர்தலில் அதிமுக- திமுகவை எதிர்த்து நேரடியாக 8 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.  முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள அமமுக திமுக போட்டியிடும் 9 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. 

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களையும் தொகுதிகளையும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அமமுகவும் முதற்கட்ட பட்டியலை அறிவித்துள்ளது. மூன்றாவது அணியாக போட்டியிடும் அமமுக அதிமுகவை எதிர்த்து 15 தொகுதிகளில் நேரடியாக போடியிடுகிறது. அதேபோல் திமுக களமிறங்கும் 9 தொகுதிகளில் டி.டி.வி.தினகரனின் அமமுக வேட்பாளர்கள் நேரடியாக மோத உள்ளனர். 

திமுக- அமமுக வேட்பாளர்கள், 1 தென்சென்னை, 2.ஸ்ரீபெரும்புதூர், 3.காஞ்சிபுரம்,  4.சேலம், 5.மயிலாடுதுறை, 6.தென்காசி, 7.திருநெல்வேலி, 8.நீலகிரி 9.பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றனர். திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ், நாமக்கல்லில் கொங்கு மக்கள் தேசிய கட்சி, ஈரோட்டில் மதிமுக, திருச்சியில் காங்கிரஸ், விழுப்புரத்தில் விசிக ஆகிய திமுக கூட்டணி கட்சிகளுடன் அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாகபட்டினத்தில் சிபிஎம், சிவகங்கையில் காங்கிரஸ், மதுரையில் சிபிஎம், ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சியுடனும் மோத உள்ளது அமமுக.   

click me!