தமிழிசை எடுத்த அதிரடி முடிவு... நிம்மதி பெருமூச்சு விடும் கனிமொழி..!

By vinoth kumarFirst Published Sep 23, 2019, 12:03 PM IST
Highlights

தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழிக்கு பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை சவுந்தரராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழிக்கு பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை சவுந்தரராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் தமிழிசை தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆர்த்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், குறைபாடான வேட்புமனுவை தாக்கல் செய்ததாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கனிமொழிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கை செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாகவும், வழக்கை திரும்ப பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தனது மனுவில் கூறியிருந்தார்.

இதையடுத்து, மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டீசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் மனு மீதான விசாரணை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

click me!