அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

Published : Sep 23, 2019, 11:29 AM ISTUpdated : Sep 26, 2019, 11:42 AM IST
அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

சுருக்கம்

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால், அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

விஜயோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும். ஐ.ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு ரூ.4500 கோடி வரவேண்டி உள்ளது. 8.17 சதவிகித அளவுக்கு தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படும்.’’ எனத் தெரிவித்தார்.  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் தமிழகத்திற்கு என்ன நன்மை என்றும் அவர் விளக்கினார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!