நான் பனங்காட்டு நரி...! சீறும் ஸ்டாலின்...!

By Vishnu PriyaFirst Published Sep 23, 2019, 10:38 AM IST
Highlights

அமித்ஷாவின் இந்தித் திணிப்பை எதிர்த்து தி.மு.க. நடத்த இருந்த போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தோம். இதை சில ஊடகங்கள் திட்டமிட்டு தவறாக செய்தி பரப்பி வருகின்றன. நாங்கள் சரணடைந்தது போலவும், பயந்து ஒதுங்கிவிட்டது போலவும் சொல்கிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம்.

* என் தலைவரைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் நானே ஆடியோ வெளியிடுவேன். இந்த ஐ.டி. உலகத்தில் எந்த வீடியோ போட்டாலும் தானாக வைரலாகும் என்பது புகழேந்திக்குத் தெரியாதா? -    சி.ஆர்.சரஸ்வதி (அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்)

* வாஜ்பாய் நம் எதிரியாக இருந்தாலும் கூட வலுவானவர் கிடையாது. ஆனால் மோடி அப்படியில்லை. இப்படியொரு பலமான எதிரியை காங்கிரஸ் இதுவரைக்கும் பார்த்ததில்லை. மோடியை வீழ்த்துவது சாதாரண வேலையில்லை. -    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

* இரண்டு மாதத்திற்கு முன்பாக என்னை தங்கள் கட்சியில் வந்து சேரும்படி பா.ஜ.வினர் அழைத்தார்கள். ஆனால் ‘நான் பெரியாரிஸ்ட். உங்கள் கட்சியின் கொள்கைக்கு நேர் எதிரானவன். நமக்குள் ஒத்துவராது.’ என்று சொல்லிவிட்டேன். -    முல்லைவேந்தன் (மாஜி தி.மு.க. அமைச்சர்)

* எதிர்த்துக் கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக் கேட்டால் ‘நாக்கை அறுப்பேன்’ என மிரட்டுவதும் தான் இவர்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆட்களின் மீது எனக்கு மயிரிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது. - கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம் தலைவர்)

* மீண்டும் ஒரு மொழிப்போர் நடக்க உள்ளது. ஆனால் இந்தப் போர் எந்த மொழியையும் எதிர்த்து நடக்காது. -மாஃபா பாண்டியராஜன் (தமிழக அமைச்சர்)

* அ.ம.மு.க.வுக்கு இன்னும் சின்னம் கிடைக்கவில்லை. எனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. சின்னம் கிடைக்கும் வரை வேறு எந்த தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை. -தினகரன் (அ.ம.மு.க. பொதுச் செயலாளர்)

* தினகரன் எனும் ஒருவரை தனிமைப்படுத்தினால் மட்டுமே அ.தி.மு.க. ஒன்றிணையும். அப்போது சசிகலாவின் தலைமையை ஏற்றிட தயாராக இருக்கிறேன்.
- திவாகரன் (அ.தி.க. பொதுச்செயலாளர், சசியின் தம்பி)

* காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த கேரளா அல்ல இப்போதைய கேரளா. யார் லஞ்சம், ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவர் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். முறைகேடுகள் ஒடுக்கப்பட்ட மாநிலமாக கேரளா மாறியுள்ளது.-    பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

* காஷ்மீர் மாநில மக்கள் கல்வி அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்த மனிதர்கள். மிகவும் சுகாதாரமான பகுதி காஷ்மீர். ஆனால் அதை காவி மயமாக்க பா.ஜ. விரும்புகிறது. -டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர்)

* அமித்ஷாவின் இந்தித் திணிப்பை எதிர்த்து தி.மு.க. நடத்த இருந்த போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தோம். இதை சில ஊடகங்கள் திட்டமிட்டு தவறாக செய்தி பரப்பி வருகின்றன. நாங்கள் சரணடைந்தது போலவும், பயந்து ஒதுங்கிவிட்டது போலவும் சொல்கிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம். - மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

click me!