ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் மனோஜ் பாண்டியனர். பிறகு ஓபிஎஸ் அணியில் இணைந்து அதிமுகவை உடைத்ததிலும் இவர் முக்கிய பங்காற்றினார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக தன்னை மனோஜ் பாண்டியன் அடையாளப்படுத்தி வருகிறார்.
நாங்குநேரி தொகுதியில் எப்படியும் களம் இறங்கிவிட வேண்டும் என்கிற முயற்சியில் மனோஜ் பாண்டியன் தீவிரம் காட்டி வருகிறார்.
முன்னாள் சபாநாயகர் பிஹெச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன். ஜெயலலிதா இருந்த போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அதிமுகவின் வழக்கறிஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வரை வகித்தவர். பிறகு சசிகலா தரப்பால் மனோஜ் பாண்டியன் ஓரங்கட்டப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் மனோஜ் பாண்டியனர். பிறகு ஓபிஎஸ் அணியில் இணைந்து அதிமுகவை உடைத்ததிலும் இவர் முக்கிய பங்காற்றினார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக தன்னை மனோஜ் பாண்டியன் அடையாளப்படுத்தி வருகிறார்.
இதற்கு பலனாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லையில் போட்டியிடும் வாய்ப்பு மனோஜ் பாண்டியனுக்கு கிடைத்தது. ஆனால் அங்கு அவர் படுதோல்வி அடைந்தார். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
எம்பி தான் ஆக முடியவில்லை எம்எல்ஏவாவாது ஆகிவிடலாம் என்று மனோஜ் பாண்டியன் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார். அதுவும் நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கிவிட்டதால் இடைத்தேர்தலில் அதிமுக எளிதில் வெல்லும் என்பதால் எப்படியாவது வேட்பாளராகிவிட வேண்டும் என்பது மனோஜ் பாண்டியனின் எண்ணமாக உள்ளது.
இதற்காக கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு எடப்பாடி தரப்பை திருப்திப்படுத்த தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறார் மனோஜ். ஆனால் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுத்துவிட்டதால் மீண்டும் அங்கு மனோஜூக்கு வாய்ப்பு வழங்க எடப்பாடி தயாராக இருக்கமாட்டார் என்கிறார்கள். அதே சமயம் ராதாபுரம் எம்எல்ஏவாக உள்ள இன்பதுரை தனது ஆதரவாளர் ஒருவருக்கு சீட் வாங்கிக் கொடுக்க எடப்பாடியை தாஜா செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.