வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும்.
சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே வியூகங்களை வகுத்து வருகின்றன. ஆளும் திமுக அரசு தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக மெகா கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதேபோல், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பெரும் எதிர்பார்க்கப்படும் டிடிவி. தினகரனும் யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் மவுனம் காத்து வரும் நிலையில் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் ;- வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாக கூறுவது யூக அடிப்படையிலான தகவல். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லலை.
சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது என கூறினார்.
இதையும் படிங்க;- ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!
மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.