நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி.. ஒரே நாளில் திமுக எம்.பி. உட்பட 25 பேருக்கு கொரோனா.. அலறும் பிரதமர் மோடி..!

By vinoth kumarFirst Published Sep 15, 2020, 9:50 AM IST
Highlights

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில், 25 எம்.பி.க்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில், 25 எம்.பி.க்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப்போனது. இறுதியாக கொரோன வைரஸ் தொற்றுக்கான வழி்காட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கூட்டம் நேற்று கூட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை மக்களவை கூட்டம் தொடங்கியது. அதற்கு முன் கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா இல்லை என்று தெரிய வந்தால் மட்டுமே நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், எம்.பி.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மக்களவை எம்.பி.க்கள் 17 பேருக்கும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 8 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பாஜக எம்.பி.க்கள் 12 பேர், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2, சிவசேனா, திமுக, ராஷ்ட்ரீய லோக்தள கட்சி எம்.பி.க்கள் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தனக்கு கொரோனா இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல், நாடாளுமன்றத்தில் பணியாற்றும் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

click me!