பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Mar 3, 2021, 5:19 PM IST
Highlights

தேர்தல் நடுநிலையாக நடத்துவது குறித்தும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளை ஒழுங்கு செய்வது குறித்தும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன்  காணொளி காட்சி  மூலம் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 மாநில  சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு  பணிகள் தீவிரப்படுத்துவது, பணம் பட்டுவாடா தடுப்பதும் குறித்து ஆலோசனை  நடைபெற்றது. 

சென்னை தலைமைசெயலகத்தில்  கானொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசணை கூட்டத்தில்  ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ,ஐ.ஆர்.எஸ் பிரிவை சார்ந்த  தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நடுநிலையாக நடத்துவது குறித்தும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளை ஒழுங்கு செய்வது குறித்தும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதேபோல் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்யும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

மேலும் தமிழகத்தில் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகளில்  துணை ராணுவம் அதிகப்படுத்துவது, வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் செயல்பாடுகளை கண்காணிப்பது, உள்ளிட்டவைகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

click me!