
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் நெடுவாசல் மக்கள் மற்றும் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் , தீய சக்திகள் என்று கூறும் எச்.ராஜா நெடுவாசல் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பண்ருட்டி வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய செயலாளர் ராஜா போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள் தீய சக்திகள் என்கிறார். அது கண்டிக்கத்தக்கது. அந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும். ஏனென்றால் அவர் அந்த நெடுவாசல் பகுதிக்கு சென்று அம்மக்களை சந்திக்க வேண்டும். அப்போது தான் உண்மை நிலை தெரியும். அதை விட்டுவிட்டு உண்மை தெரியாமல் விமர்சிக்கும் ராஜா நெடுவாசல் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழிசை இந்த திட்டத்தை பற்றி ஒன்றுமே புரியவில்லை நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள் என்று கூறுகிறார். இதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் போராட்ட களத்தில் சென்று பார்த்தால் உண்மை தெரிய வரும்.
அங்கு நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும். ஆழ்துளை கிணறுகள் மூலம் 600 மீட்டர் ஆழத்தில் வேதிப்பொருட்களை வெடிக்கும் போது உள்ளூர உள்ள நிலத்தடி நீர் கடுமையாக மாசுப்படும் என்பது உண்மை.
நரிமணத்தில் இது போன்ற திட்டத்தில் , நெய்வேலியிலும் இதே நிலைதான் அங்குள்ள மக்கள் இதய கோளாறு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் மாவட்ட அமைச்சர் அப்பகுதிக்கு சென்று மக்களை சந்திக்கவில்லை. அவர் சென்று மக்களை பார்த்து அவர்களில் சிலரை அழைத்து சென்று முதலமைச்சரை பார்த்து மாய்மால வேலை செய்து போராட்டத்தை சிதைக்க நினைக்க கூடாது. போராடும் மக்களுடன் இணைந்து செயலபட வேண்டும். இவ்வாறு வேல்முருகன் பேசினார்.