சபாஷ் சரியான போட்டி... மண்ணின் மைந்தன் ஓ.பி.எஸ்-ஐ எதிர்த்து களமிறங்கும் தங்க தமிழ்ச்செல்வன்...!

By vinoth kumarFirst Published Mar 12, 2021, 2:00 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது.   இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடன் திமுக கூட்டணியை இறுதி செய்துவிட்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இ.யூ.முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு  தலா 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. 

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த வகையில் 61 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எஞ்சிய 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்நிலையில், 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், போடி தொகுதியில் திமுக சார்பில்  தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட உள்ளார். 

அதே தொகுதியில் தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதுவரை தான் போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றியை மட்டுமே சுவைத்துள்ளார். ஓபிஎஸ் இதுவரை ஒருமுறைக்கூட தோல்வியடைந்ததில்லை. இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்து, அமமுகவில் இணைந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் திமுகவில் இணைந்த தங்கச் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இதனால், போடி தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 

click me!