
நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்த ஓபிஎஸ் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.
அதில் அதிமுகவில் எதிர்காலம் குறித்தும் பாஜகவுடன் அதிமுகவுடனான தொடர்பு, பிரதமர் மோடி பற்றியும், ஜெ பற்றியும் பல்வேறு விசயங்களையும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
விரைவில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஓபிஎஸ்சும் தனது ஆதரவை சூசகமாக தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்சிடம் ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டபோது பாஜக தேர்வு செய்யும் வேட்பாளர் நல்லவராகத்தான் இருப்பார்கள்.
எங்களுடைய ஆதரவு அவருக்குத்தான் ஆனாலும் முறைப்படி கட்சியின் மேல்மட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரவித்தார்.