
நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்த ஓபிஎஸ் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.
அதில் அதிமுகவில் எதிர்காலம் குறித்தும் பாஜகவுடன் அதிமுகவுடனான தொடர்பு, பிரதமர் மோடி பற்றியும், ஜெ பற்றியும் பல்வேறு விசயங்களையும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது பேசப்பட்டு வரும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கபட்ட கேள்விக்கு அரசியலில் யார் வேண்டுமானாலும் கால் பதிக்கலாம்.ரஜினி தாராளமாக அரசியலுக்கு வரலாம்.
பிற்காலத்தில் கூட்டணி அமைக்க வேண்டிய வாய்ப்பு வந்தால் ரஜினி அதற்கு இசைவு தெரிவித்தால் அவருடன் கை கோர்க்க தயாராக இருக்கிறேன் என்று பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.