
இரட்டை இலையை எப்படியாவது கைப்பற்றிவிடலாம் என சில துரோகிகள் நினைப்பதாகவும் இன்னும் சில தினங்களில் இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் வீடு உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஐதராபாத் கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 ஆணையர்கள் ரெய்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம் என தெரிவித்து வருகிறார்.
இதனிடையே சில நாட்களாக தேர்தல் ஆணையத்தால் முடக்கிவைக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் டிடிவி தரப்புக்கும் ஒபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் ஆணையத்தில் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு தேதி மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ரெய்டு யோசிக்க வேண்டிய ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு தேனியில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஒபிஎஸ், இரட்டை இலையை எப்படியாவது கைப்பற்றிவிடலாம் என சில துரோகிகள் நினைப்பதாகவும் இன்னும் சில தினங்களில் இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.