என்னாது... ரெய்டா..? இப்பதானே தூங்கி எழுந்து வர்றேன்... திண்டுக்கல் ‘நக்கல்’!

First Published Nov 9, 2017, 5:30 PM IST
Highlights
dindukkal seenivasan express his comment over todays it raids


தமிழகத்தை மட்டுமல்ல, தேசிய ஊடகங்களிலும் இன்று காலை முதல் பரபரப்பைக் கூட்டிய விஷயமாகத் திகழ்ந்தது, சென்னையில் சசிகலா தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரி சோதனைதான். இந்த சோதனை குறித்து ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்க, மக்களோ பரபரப்பாய் பேசிக் கொண்டிருக்க... மாண்புமிகு ஒருவரோ கண்களைக் கசக்கியபடி போக்குக் காட்டி கொட்டாவி விட்டபடி நகர்ந்திருக்கிறார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள்,  நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுலவகத்தில் தொடங்கி கொடநாடு எஸ்டேட் வரைக்கும் நீண்டது இந்த சோதனை நடவடிக்கைகள். 

இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாக் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனை இன்று செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர் வாய் திறந்து பேசினால் ஏதேனும் விவகாரம் வெளி வரும் என்ற நம்பிக்கை இப்போதெல்லாம் செய்தியாளர்களிடமும் உலவுகிறது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அவர் பேசிய பேச்சுக்களால் தான் பெரிய அளவில் பரபரப்பும் விவாதமும் எழுந்தது. அந்த எண்ணத்தில் இன்றும் அவரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், “என்னது..? தினகரன் வீட்டில் ரெய்டா...? எனக்கு ஏதும் தெரியாதுப்பா.. இப்பதான் நான் தூங்கி எழுந்து வரேன்...” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுச் சென்றார்.

இது போல், இன்னொரு அமைச்சர் மணியனிடம் செய்தியாளர்கள் சென்றனர். வருமான வரிக்கும் வருவாய்த் துறைக்கும் சம்பந்தமில்லாமலா இருக்கும்? 

தேனியில் செய்தியாளர்கள் அமைச்சர் மணியனை சந்தித்து, இந்த வருமான வரி சோதனை தொடர்பாக   என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்து உங்களுக்கு தெரியுமா? என்றெல்லாம் கேட்டனர். அதற்கு மணியன், “சோதனை எதற்கு நடக்கிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த வருமான வரிச் சோதனையை மேற்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். மடியில் கனமில்லை என்பதால், எனக்கு பயமில்லை. மோடியை முதல்வர் சந்தித்ததால் இந்த சோதனை நடக்கவில்லை. இது முன்னரே திட்டமிடப்பட்டிருக்கும்” என்று கூறி ஒதுங்கிக்  கொண்டார். 

click me!