ஜெ. இருந்திருந்தால் ஐ.டி. ரெய்டு நடந்திருக்குமா? சி.ஆர்.சரஸ்வதி கேள்வி!

First Published Nov 9, 2017, 5:30 PM IST
Highlights
If Jaya was there did the IT raid happen?


ஜெயலலிதா இருந்தருந்தால், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பார்களா என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 187 இடங்களில் 1800 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை குறித்து டிடிவி தினகரன் கூறும்போது, வருமான வரித்துறை சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறினார். எல்லாவற்றையும் துணிச்சலாக சந்திப்போம் என்றும் கூறினார். 

இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளரான சி.ஆர். சரஸ்வதி கூறும்போது, ஜெயலலிதா இருந்திருந்தால் வருமான வரித்துறையினர் ஐடி ரெய்டு நடத்தியிருப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து முன்னணி இணையதளம் ஒன்றிற்கு சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளித்தார். 

மேலும் பேசிய அவர், இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது என்றும் கூறினார். ஒரே நேரத்தில் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் 200 இடங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜெயா டிவியும், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையும் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் இருந்தது என்றும் வரி ஏய்ப்பு செய்திருந்தால் ஒரு நிறுவனத்தை இத்தனை ஆண்டுகள் எப்படி நடத்த முடியுமா என்றார். எடப்பாடி அணியினர் என்ன சொன்னாலும் மத்திய அரசு கேட்கிறது. அந்தளவுக்கு மத்திய அரசின் பாசத்துக்குரியவர்களாக எடப்பாடி அணியினர் உள்ளனர். ஜெயலலிதா எங்களுக்கு தைரியத்தையும், தெம்பையும் கொடுத்துள்ளதால் நாங்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றும் இதனை சட்டப்படி தீர்ப்போம் என்று சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

click me!