சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு மாறுபட்ட கருத்தா? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 15, 2021, 10:27 AM IST
Highlights

நீட் தேர்வு வேண்டாம் என மீண்டும் தீர்மானம் போடுவோம் என்கின்றனர். ஏற்கெனவே, சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியின்போது, நீட் தேர்வு வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தோம். 

திமுகவின் பொய்யான வாக்குறுதி வெட்டவெளிச்சமாகிவிட்டது. நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்ற நிலையில் தமிழக வாக்காளர்கள் உள்ளனர் என  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் மந்திதோப்பு பகுதியில் நிழற்குடை ஒன்றை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடம்பூர் ராஜூ;-  தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இருக்காது என, திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம் குறைப்போம் என கூறியிருந்தனர். ஆளுநர் உரையில் அந்த அம்சமே இல்லை.

நீட் தேர்வு வேண்டாம் என மீண்டும் தீர்மானம் போடுவோம் என்கின்றனர். ஏற்கெனவே, சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியின்போது, நீட் தேர்வு வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தோம். இன்றைக்கு அவர்களது பொய்யான தேர்தல் வாக்குறுதி வெட்டவெளிச்சமாகிவிட்டது. நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்ற நிலையில் தமிழக வாக்காளர்கள் உள்ளனர்.

சசிகலா விவகாரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாறுபட்ட கருத்து இல்லை என  கடம்பூர் ராஜூ விளக்கமளித்துள்ளார்.

click me!