குடியிருப்புச் சங்கங்கள் வசூலிக்கும் சந்தா தொகைக்கு ஜிஎஸ்டி தொகை.. ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2021, 9:42 AM IST
Highlights

தொகை 7,500 ரூபாய்க்கு மேலிருந்தால், வித்தியாசத் தொகைக்கான ஜிஎஸ்டி தொகையை செலுத்துவதற்குப் பதிலாக முழுமையான தொகைக்கும் வரி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி (ஏஆர்ஏ - அட்வான்ஸ் ரூலிங் அதாரிட்டி) ஆணையம் ஆணை பிறப்பித்திருந்தது. 

குடியிருப்புச் சங்கங்கள் வசூலிக்கும் சந்தா தொகை 7,500 ரூபாய்க்கு மேலிருந்தால் முழுமையான ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குடியிருப்புச் சங்கங்கள் வசூலிக்கும் மாத சந்தா தொகை 7,500 ரூபாய் வரை இருந்தால், அதற்கு ஜிஎஸ்டி செலுத்த வரி விலக்கு உண்டு எனவும், சந்தா தொகை 7,500 ரூபாய்க்கு மேலிருந்தால், வித்தியாசத் தொகைக்கான ஜிஎஸ்டி தொகையை செலுத்துவதற்குப் பதிலாக முழுமையான தொகைக்கும் வரி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி (ஏஆர்ஏ - அட்வான்ஸ் ரூலிங் அதாரிட்டி) ஆணையம் ஆணை பிறப்பித்திருந்தது. 

இந்த ஆணையை ரத்து செய்யக் கோரி டி.வி.ஹெச். லும்பினி குடியிருப்பு சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஜிஎஸ்டியை அமல்படுத்திய போது குடியிருப்புச் சங்கங்களுக்கு சாதகமாக கருத்து தெரிவித்த அரசு, பின்னர் தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது எனக் கூறி, சந்தா தொகை 7,500 ரூபாய்க்கு மேலிருந்தால் முழுமையான ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற ஜிஎஸ்டி (ஏஆர்ஏ - அட்வான்ஸ் ரூலிங் அதாரிட்டி) ஆணையத்தின் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

click me!