சசிகலாவுடன் இணைந்த ஓபிஎஸ் மகள்..! அதிரடி ஆபரேசன் ஸ்டார்ட்..!

By Selva Kathir  |  First Published Sep 4, 2021, 11:42 AM IST

கவிதாவுடன் சசிகலா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறுகிறார்கள். அடக்க முடிந்தது, விசேசம் முடிந்ததது என அனைத்து விஷயங்களையும் கவிதாவை நேரடியாக தொடர்பு கொண்டு சசிகலா கேட்டு இருக்கிறார். அத்தோடு அவ்வப்போது அப்பாவை பார்த்துக் கொள் என்று ஓபிஎஸ் மீதும் அவரது மகள் கவிதா மூலமாக அக்கறை காட்டியுள்ளார் சசிகலா. 


ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் மரணத்தை தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் அதிமுகவில் மட்டும் அல்ல தமிழக அரசியல் களத்திலும் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்த உள்ளன.

விஜயலட்சுமி மரணம் தொடர்பான தகவல் கிடைத்த உடனே சசிகலா அங்கு சென்றுவிட முடிவு செய்தார். ஆனால் சென்னையில் விஜயலட்சுமி உடலுக்கு மரியாதை செலுத்துவதை விட தேனி பெரியகுளம் சென்றால் நன்றாக இருக்கும் என சிலர் ஆலோசனை கூற, அதெல்லாம் வேண்டாம் நான் உடனே செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளார் சசிகலா. ஆனால் அதற்குள் மருத்துவமனைகளில் நடைமுறைகள் எல்லாம் முடிந்து விஜயலட்சுமி உடலை தேனிக்கு கொண்டு சென்றார் அவரது இளைய மகன் ஜெயபிரதீப்.

Tap to resize

Latest Videos

undefined

இதனை அடுத்து ஓபிஎஸ்சை சந்தித்து ஆறுதல் கூறி துக்கம் விசாரிக்க சசிகலா முடிவு செய்தார். உடனடியாக ஓபிஎஸ் தரப்புக்கு இந்த தகவல் பாஸ் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் ஓபிஎஸ்சும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டிருந்தார். ஆனால் சசிகலா வருகிறார் என்று கூறிய உடன் மருத்துவமனையில் அவருக்காக காத்திருப்பது என்று முடிவு செய்தார். அத்தோடு சசிகலா வரும் தகவலையும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் ஓபிஎஸ் தரப்பு பாஸ் செய்திருந்தது. இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்கள் மருத்துவமனையை காலி செய்துவிட்டு பறந்தனர்.

ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மட்டுமே இருந்தார். இந்த நிலையில் சசிகலாவின் கார், மருத்துவமனை வாயிலுக்கு வந்த உடன் அவரை நேரில் சென்று அழைத்ததது ஓபிஎஸ்சின் மகள் கவிதா. என்ன இப்படி ஆகிவிட்டது? என்று சசிகலா கேட்டதும் கவிதா அழத் தொடங்கினார். உடனடியாக சசிகலாவும் கண் கலங்கினார். ஏன் இப்படி லட்சுமியை கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி கவிதாவுடன் நடந்து சென்றார் சசிகலா.

தொடர்ந்து ஓபிஎஸ்சை சந்தித்து பேசிய சசிகலா என்ன ஆச்சு என்று விசாரிக்க எதற்கும் வார்த்தைகள் வராமல் கண் கலங்கியபடியே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஓபிஎஸ். சசிகலாவும் தனக்கும் விஜயலட்சுமிக்கும் இடையிலான பழக்கத்தை கூறி கடந்த கால நினைவுகளை குறிப்பிட்டு ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டார். அப்போதும் ஓபிஎஸ் மகள் கவிதா சசிகலாவுடன் இருந்தார். அம்மா இல்லை என்று கவலைப்படாதே, நான் இருக்கிறேன், எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து பார், ஒரு தாயிடம் என்ன கேட்பாயோ தயங்காமல் அதை என்னிடம் கேள், என் மகளாக உனக்கு நான் என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்கிறேன் என்று சசிகலா கூற அவர் கைகளை பிடித்து கதறி அழுதுள்ளார் கவிதா.

இந்த நிகழ்வுகளுக்கு பிறகும் கவிதாவுடன் சசிகலா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறுகிறார்கள். அடக்க முடிந்தது, விசேசம் முடிந்ததது என அனைத்து விஷயங்களையும் கவிதாவை நேரடியாக தொடர்பு கொண்டு சசிகலா கேட்டு இருக்கிறார். அத்தோடு அவ்வப்போது அப்பாவை பார்த்துக் கொள் என்று ஓபிஎஸ் மீதும் அவரது மகள் கவிதா மூலமாக அக்கறை காட்டியுள்ளார் சசிகலா. இந்த உறவு இப்படி இந்த துக்கத்தோடு முடிந்துவிடாது என்பதைத்தான் சசிகலாவின் இந்த அக்கறை காட்டுவதாக கூறுகிறார்கள். ஓபிஎஸ் – சசிகலா இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் ஓபிஎஸ் மனைவி சசிகலாவுடன் நல்ல உறவில் தான் இருந்துள்ளார்.

தற்போது அந்த உறவு ஓபிஎஸ் மகளுடன் சசிகலாவிற்கு உருவாகியுள்ளது. எனவே அதிமுகவில் தனது அதிகாரத்தை காட்ட ஓபிஎஸ் மகள் மூலமாக சசிகலா காய் நகர்த்துவதார் என்கிறார்கள். ஓபிஎஸ்சும் கூட ஏற்கனவே எடப்பாடிக்கு எதிராக வீக்காகவே இருக்கும் நிலையில் சசிகலாவுடன் இணைந்தால் என்ன என்கிற யோசனை செய்யக்கூடும் என்றும்? ஆனால் இவை அனைத்திற்கும் பாலத்தை ஏற்படுத்த ஓபிஎஸ் மகள் கவிதாவை நிச்சயமாக சசிகலா பயன்படுத்துவார் என்கிறார்கள்.

click me!