பள்ளி திறக்கப்பட்டதால் கொரோனா அதிகமாகிறதா..? மா.சுப்ரமணியன் விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 4, 2021, 11:41 AM IST
Highlights

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு தான் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சொல்வது தவறான கருத்து என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு தான் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சொல்வது தவறான கருத்து என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு தான் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சொல்வது தவறான கருத்து. அவர்களுக்கு ஏற்கனவே அறிகுறிகள் என்பதால் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம்தான். அப்போது தான் மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கமுடியும்.

கொரோனாவை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை கேரள எல்லை பகுதியில் இருப்பதால் கொரோனா அங்கு அதிகரித்துள்ளது. கேரள எல்லையை ஒட்டிய 9 மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா அதிகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கேரளாவில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அங்கும் தினசரி கொரோனா குறைந்து வருகிறது.

9 மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி போடுதல் பணிக்காக தடுப்பூசி போடுவதற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இந்தியாவைப் பொருத்தவரை எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க வில்லை. கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 17 வயது முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசியுள்ளோம் ” என்றார்.

செப் 1'ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

click me!