ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் M.P, உட்பட பன்னீர் ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.. EPS அதிரடி.

By Ezhilarasan Babu  |  First Published Jul 14, 2022, 6:45 PM IST

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களை கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். 


இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களை கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். ஓபிஎஸ்  ஆதரவாளர்களாட வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் சையது கான், ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் , இளையமகன் ஜெயபிரதீப் ஆக்கியோர் உட்பட 17 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கு கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குறையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கம் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்

Tap to resize

Latest Videos

1.  VNP  வெங்கட்ராமன் EX MLA  கழக வர்த்தக அணி செயலாளர்

2.  இரா கோபாலகிருஷ்ணன் Ex mp  அதிமுக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்

3.SPM  சையது கான் Ex MP (தேனி மாவட்ட கழகச் செயலாளர்)

4. R.T ராமச்சந்திரன் EX MLA ,பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர்

5. MGM  சுப்பிரமணியன் EX MLA தஞ்சாவூர்  வடக்கு மாவட்ட கழக செயலாளர்.

6.S.A அசோகன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

7. ஓம்சக்தி சேகர் EX MLA புதுச்சேரி மேற்கு மாநில கழக செயலாளர்

8.  பா ரவீந்திரநாத் M.P, (தேனி மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்)

9. வி.பா ஜெயபிரதீப் தேனி மாவட்டம்  (தகப்பனார் பெயர் பன்னீர்செல்வம்) 

10. கோவை செல்வராஜ்  (Ex MLA, கழக செய்தி தொடர்பாளர்) 

11. மருது அழகுராஜ் (கழக செய்தி தொடர்பாளர்)

12.  அம்மன் பி வைரமுத்து கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் சென்னை புறநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர்

13. D. ரமேஷ் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்

14. B. வினுபாலன் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல செயலாளர்

15.  கொளத்தூர் D. கிருஷ்ணமூர்த்தி  வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்

16.  சைதை MM  பாபு Ex MC (தென்சென்னை தெற்கு மாவட்ட கழக முன்னாள் செயலாளர்)

17. SR அஞ்சு லட்சுமி கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்

 ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!