
தமிழகம் முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களை சந்திக்கும் இரண்டாவது கூட்டம் சேலத்தில் இன்று நடத்துகிறார்.
ஜெயலலிதாவின் மரத்னத்தையடுத்து அ.தி.மு.கவில் நாளுக்கு நாள் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. சசிகலா பொதுச் செயலாளர், சசியின் முதல்வர் கனவு, பன்னீரின் ராஜினாமா, , ஜெ., சமாதியில் தியானம், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் சசிகலா சிறை, எடப்பாடி முதல்வரானது என இரு அணியாக இருந்து தற்போது சிதறிக்கிடக்கிறது.
இந்நிலையில், இரு அணிகள் இனைய வேண்டுமென்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நீதி விசாரணை வேண்டும், சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக ஓரம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பன்னீர் அணியின் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட ஓ.பன்னீர்செல்வம். முதற்கட்டமாக காஞ்சிபுரத்தில் பயணத்தை தொடங்கினார் . இதனையடுத்து தற்போது சேலத்தில் நடக்கும் செயல் பொது கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சேலம் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.