கட்டப்பஞ்சாயத்து மேட்டர்! தமிழன் பிரசன்னா மீது செம டென்சனில் ஸ்டாலின்!

Published : Sep 27, 2018, 09:29 AM ISTUpdated : Sep 27, 2018, 09:34 AM IST
கட்டப்பஞ்சாயத்து மேட்டர்! தமிழன் பிரசன்னா மீது செம டென்சனில் ஸ்டாலின்!

சுருக்கம்

கல்லூரி பேராசிரியை ஒருவருக்கு பத்திரிகை நிரூபர்கள் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தி.மு.க செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்ற விவகாரம் மு.க.ஸ்டாலின் வரை சென்றுள்ளது.

கல்லூரி பேராசிரியை ஒருவருக்கு பத்திரிகை நிரூபர்கள் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தி.மு.க செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்ற விவகாரம் மு.க.ஸ்டாலின் வரை சென்றுள்ளது. நிரூபர்கள் மீது பேராசிரியை சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து 10 நாட்கள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சில பத்திரிகையாளர்கள் தலையிட்டதை தொடர்ந்து நிருபர்கள் இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். 

அந்த சமயத்தில் திருமங்கலம் காவல் ஆய்வாளருக்கு தி.மு.க வழக்கறிஞரும், செய்தி தொடர்பாளருமான தமிழன் பிரசன்னா செய்த தொலைபேசி அழைப்பு தான் பிரச்சனையானது. காவல் ஆய்வாளர் நிரூபர்கள் இருவருக்கும் எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுத்து வந்தார். ஆனால் சட்டப்படி நடவடிக்கை வேண்டாம் என்றும், பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தமிழன் பிரசன்னா ஆய்வாளருக்கு கூறியது கட்டப்பஞ்சாயத்திற்கு சமம் என்று பேராசிரியை தரப்பில் புகார் எழுந்தது. மேலும் நிரூபர்களை கைது செய்யவிடாமல் தடுக்க அண்ணா அறிவாலயத்தின் பெயரையும் தமிழன் பிரசன்னா காவல் ஆய்வாளரிடம் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் பரவியது. மேலும் தமிழன் பிரசன்னா தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் மு.க.ஸ்டாலினிடமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.  மேலும் பேராசிரியையின் சகோதரரின் ஊடக நண்பர்கள் சிலரும் ஸ்டாலின் அலுவலகத்திற்கு நேரடியாகவே தமிழன் பிரசன்னா குறித்து புகார் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. 

முதலில் ஊடகங்களில் வெளியான தகவல் உண்மை தானா என்று திருமங்கலம் காவல்நிலையத்தில் விசாரித்துக் கூறும்படி அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகனிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஸ்டாலினுக்கு கிடைத்த தகவல் தமிழன் பிரசன்னாவிற்கு எதிராகவே இருந்துள்ளது. இதனால் தமிழன் பிரசன்னா மீது ஸ்டாலின் டென்சனில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கைக்கும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..