தம்பிதுரையின் லட்சணத்தை டாகுமெண்ட்ரி சி.டி.போட்ட பிஜேபி! ஆதாரத்துடன் அம்பலமாக்க மிரட்டல் ப்ளான்!

By manimegalai aFirst Published Sep 27, 2018, 9:27 AM IST
Highlights

தமிழக அரசின் உரிமைகள் சிலவற்றை நசுக்குகிறது எனும் ரீதியிலும் கடந்த சில நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார் அவர். இதனால் தம்பிதுரையின் சொத்துக்களில் கூடிய விரைவில் ரெய்டோற்சவம் துவங்கலாம்! என்று கூட பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. 

அகில இந்திய பி.ஜே.பி.யின் அனல் பார்வைக்கு ஆளாகியிருக்கிறார் நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை. காரணம்? தி.மு.க.வுடன் கூட்டணிக்கு அக்கட்சி முயல்கிறது எனவும், தமிழக அரசின் உரிமைகள் சிலவற்றை நசுக்குகிறது எனும் ரீதியிலும் கடந்த சில நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார் அவர். இதனால் தம்பிதுரையின் சொத்துக்களில் கூடிய விரைவில் ரெய்டோற்சவம் துவங்கலாம்! என்று கூட பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், ’பி.ஜே.பி.யை இவ்வளவு வாய் பேசும் தம்பிதுரை ரொம்ப நல்லவரா? அவர் தத்தெடுத்த கிராமத்தின் கேவல கதியை பாருங்கள்!’ என்று ஒரு டாகுமெண்ட்ரியே ஓட்ட துவங்கியிருக்கிறது பி.ஜே.பி.யின் இளைஞரணி. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கரூர் மாவட்டத்திலுள்ள ‘பாலவிடுதி’ எனும் கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார். நாடாளுமன்ற துணை சபாநாயகரே தங்களை தத்தெடுத்திருப்பதால், கூடிய சீக்கிரம் நம்ம கிராமம் எங்கேயோ போயிடும், எப்படியோ ஆயிடும்! என்று அநியாயத்துக்கு நம்பியிருக்கின்றனர் மக்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் சோகம்! என்கிறனர் பி.ஜே.பி. இளைஞரணியினர். 

அந்த டாகுமெண்ட்ரியிலுள்ள மக்களின் ஹைலைட் கண்ணீர் காட்சிகள் இதோ...

*இந்த ஊருக்குள் டேங்க் இருக்கிறது, பைப்  இருக்கிறது. ஆனால் தண்ணீர்தான் இல்லையாம். குடிதண்ணீருக்காக ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் நடக்கணுமாம். 

*கிராமத்தை தத்தெடுத்த  புதிதில் ஏதோ சென்னை ரேஞ்சுக்கு அதை உயர்த்திவிடுவதாக உறுதிமொழி தந்தாராம் தம்பி, ஆனால் அதன் பிறகு இந்த பக்கமே தலை வெச்சு படுக்கலையாம். 

*அம்மாம் பெரிய மனுஷன் தத்தெடுத்த ஊருன்னு  பெருமையா பேசிக்கிறாங்களே, ஊருக்குள்ளே பொம்பளைங்களுக்கு ஒரு கழிப்பிட வசதியிருக்குதா? என்று கொதிக்கிறார்களாம் பெண்கள். 

*பள்ளிக்கூட பசங்களுக்கு குடிக்க தண்ணீர் கூட இல்லாம சிரமப்படுறோம், ஆனா அவரு தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் விமானத்துல சர்ருபுர்ருன்னு பறந்து வாழ்க்கையை அனுபவிச்சுட்டு இருக்கிறாரு! அதுவும் அரசாங்க செலவுல! என்று போட்டு தாக்கியிருக்கிறார்கள். 

இந்த டாகுமெண்ட்ரியின் முடிவில், “நீங்க தத்தெடுத்த கிராமத்தை ஏன் இப்படி தவியாய் தவிக்க விட்டிருக்கீங்க? அப்படின்னு கேட்டால் ‘மத்திய அரசு சொன்ன மாதிரி நிதி தரலை. ஆனால் நிதி தராமல் ஏமாத்திடுச்சு.’ அப்படின்னு சொல்றாராம். அப்படியே வெச்சுக்குவோம், தத்தெடுத்த கிராமத்துக்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்தும், வலியுறுத்தியும் இதுவரை எத்தனை தடவை பேசினார், எங்கே மனு கொடுத்தார்? தன் மக்கள் இப்படி தவிக்கிறப்ப தான் மட்டும் ஏன் அரசு செலவில் சொகுசு வாழ்க்கை வாழணும்னு என்னைக்காவது எளிமையா இருந்திருக்கிறாரா? இல்லையே! மத்தியரசு நிதி தரலைன்னு சொல்றது சுத்த பொய். 

இதுவரையில் தம்பித்துரை தத்தெடுத்த பாலவிடுதி கிராமத்துக்கு எவ்வளவு பணம் டெல்லி ஒதுக்கியுள்ளது அப்படிங்கிறதை ஆதாரத்தோடு வெளியிடுவோம். கூடவே, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு மற்ற எம்.பி.க்களை  அடக்கும் தம்பிதுரையின் உண்மை முகத்தையும், அவர் தத்தெடுத்த கிராம தவிக்கும் அவலத்தையும் சி.டி. போட்டு ஒவ்வொரு எம்.பி.க்கும் கொடுக்கப்போறோம். அடுத்த முறை எம்.பி. சீட் கிடைச்சாலும் கரூர் மாவட்டம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கால் வைக்க தம்பிதுரை அலறணும்!” என்று சபதமே போட்டிருக்கிறார்கள். 
தம்பிதுரைக்கு இது பெரிய கஷ்டம்தான் போல!

click me!