கொந்தளிப்பை ஏற்படுத்திய பாஜகவின் நிர்மல்குமார் டிவீட்... கடுமையாக விளாசிய பழனிவேல் தியாகராஜன்!!

By Narendran S  |  First Published Sep 18, 2022, 9:13 PM IST

ராகுல்காந்தி புகைப்படத்துடன் பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் பதிவிட்ட ட்வீட்டை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். 


ராகுல்காந்தி புகைப்படத்துடன் பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் பதிவிட்ட ட்வீட்டை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்துக்கு 150 நாட்கள் ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளா மாநிலத்திற்குள் கடந்த 11 ஆம் தேதி நுழைந்தது. கேரளாவில் இன்று ராகுல்காந்தியின் 7 ஆவது நாள் பாதயாத்திரை ஆலப்புழா ஹரிப்பாடு பகுதியில் இருந்து தொடங்கியது. இதனிடையே ராகுல் காந்தி அணிந்திருந்த டிசர்ட், ராகுல் ஓய்வெடுக்கும் கேரவன் பற்றி பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் ராகுல் காந்தியின் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: “மனுவை வாங்கிட்டு பிக்பாஸ் போயிடாதீங்க கமல்.. உதயநிதியின் நெருங்கிய நண்பர்” - வானதி சீனிவாசன் அதிரடி !

Tap to resize

Latest Videos

 

அந்தப் புகைப்படத்தில் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவின் மகள் மிராயா வத்ராவுடன் பேசிக் கொண்டிக்கிறார். அந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் எடுக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தை ஒரு எமோஜி மட்டும் போட்டு பதிவிட்டிருந்தார். இது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து நிர்மல் குமாரின் செயல் கேவலமானது என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். இதையடுத்து அந்த ட்வீட்டை நீக்கிய நிர்மல் குமார், குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த பப்புவை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது என்று கேப்ஷனை மாற்றி மீண்டும் பதிவிட்டார்.  

இதையும் படிங்க: ஊழல் வழக்கில் சிக்கிய எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி.. நெருக்கும் நீதித்துறை.. அடுத்து என்ன ?

Unfortunately you can't expect anything more than such trash from bottom-feeders who seem to have multi-faceted and deep-rooted complexes about women. Sure TN BJP will give him an award and felicitate him for this vile smear.....he's only following his boss's directions after all https://t.co/fVXIZ4xghk

— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai)

இதற்கிடையே, நிர்மல் குமாரின் இந்த ட்வீட் குறித்து தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கட்டுமையாக விமர்சித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், துரதிர்ஷ்டவசமாக, பெண்களைப் பற்றி கீழ்த்தரமான எண்ணங்களைக் கொண்ட வாய் வழியாக உணவைச் சாப்பிடாதவர்களிடம் இருந்து இதுபோன்ற குப்பைகளைத் தவிர வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த கேவலமான அவதூறுக்காக தமிழக பாஜக அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கும். அவர் தனது முதலாளியின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்றுகிறார் என்று தெரிவித்துள்ளார். 

click me!